பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணராற் பாடப்பட்டவர்கள் 83

தன் ஆடையை அம்மயில்மீது போர்த்து விட்டுப் போயி ன்ை; பேகனின் அருள் உள்ளத்தையும், கொடைச் சிறப்பையும் உணர்த்தும் இவ்வரிய நிகழ்ச்சியினேப் புலவர் கள் பலரும் பாராட்டுவாராயினர். # -

இவ்வாறு பெருமைமிக்க பேகனைப் பார்த்துப் பாராட்டப் பரணர் விரும்பினர். மழை, சேற்று வற்றிய குளத்திலும், வித்திவான் நோக்கும் வயல்களிலும் பெய்து பயனுடையதாகிறது; ஒன்றும் விளையாக்களர்கிலத்திலும் பெய்து பயனின்றிக் கழிதலும் உண்டு. இவ்வாறு, பெய் தால் பயனளிக்கும் இடம் இது; ஆகவே ஈண்டுப் பெய்தல் வேண்டும்; பெய்தாலும் பயனுரு இடம் இது; ஆகவே, ஈண்டுப் பெய்தல் கூடாது என வரையறுத்துக் கொள் ளாது, எங்கும் பெய்வதே போல், பேகனும், இரவலர்தம் தகுதி, தகுதியின்மைகளை அறிந்து நோக்கும் அறிவில ய்ைத் தன்பால் வந்து இரப்பார் யாவரே ஆயினும் அவர்க் குப் பொருள்கொடுத்து அறிவற்றவனவன். ஆனல், அவன், இவ்வாறு கொடைத்தொழிற்கண் அறிவற்றவன் ஆவனேயன்றி, போரின்கண், அறிவின்றிக் கண்மூடிக் கொண்டு போரிடுவானல்லன். போரில், பேராண்மை இலர்தார், புறமுதுகிட்டுப் புண்பெற்ருேர், இளேயர், முதியோர் எனப் போர்த்தகுதி பெருகாரும் வருவர்; அவர்கள்மீது எல்லாம் அமர்தொடுத்தல் ஆண்மை உட்ை யார்க்கு அறமாகாது ; ஆண்டாலும், ஆற்றலாலும் தம்மை யொத்தார்மீதே போரிடுதல் வேண்டும். இது போர் அறம், பேகன், இவ்வறம் அறியாத போரிடான். அவன், போர்.அறம் அறிந்த பேர்அறிவாளன் ஆவன்.” ..

'அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும் உறும் இடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும் வரைய மரபின் மாரி போலக் கடாஅ யானைக் கழற்கால் பேகன், கொடை மடம் படுதல் அல்லது, o படை மட்டம் படான்பிறர் படைமயக் குறினே: . . . . . . . . . . . : . . . . . . . . . . . . . . * ***...' * * * (புறம். கச்உ