பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ப ண ர்

என, அவன் கொட்ையும் கொற்றமும் ஒருங்கே விளக்கும் பாடல் ஒன்றைப் புனைந்துகொண்டு அவன் ஊர் சென்றார்.

ஆவிநன்குடியடைந்த பரணர், பேகன்பெருமனே முன் கின்று, அவனேயும், அவன் காட்டையும் பாடினர்; அப் பாடல்கேட்டு அங்கே வந்தாள் பேகன் பெருந்தேவியார் ; கண்ணகி என்னும் கல்லாள் ; வந்தவள் முகத்தைப் பரணர் பார்த்தார்; நீலமலர் போன்ற அவள் கண்களி னின்றும் சிந்தும் கண்ணிர், அவள் அணிகளையெல்லாம் நனேத்துக்கொண்டிருப்பதை அறிந்தார் ; பேகன், பேராற் றல் உடையவன்; பெருங்கொடை வள்ளல்; ஆகவே, அவனுக்குரியோர் எல்லாம் இன்பவாழ்வினராவர் ; ஆனல், ஈண்டு நிற்கும் இவள் அழுகிருள் ; இவள், அவனுக்கு உரிமை உடையாள் அல்லள்போலும் என எண்ணினர் ; அவளே வணங்கி, இளமையும் அழகும் உடையீர்! தாங்கள் எம்மால் விரும்பப்பெறும் பேகனுக்குப் பெருங்கிழமை உடையையோ?” என வினவினர். உடனே, அவள், மலர்போன்ற தன் கையால் கண்ணிரைத் துடைத்துக் கொண்டே, ' நாங்கள், அவனுக்கு உரிமை உடையால்லர்; அவன், உங்கள் தலைவன் பேகன், எம்போன்ருள் ஒரு பரத்தையோடு உறவுடையய்ை முல்லேகல்லூரின் கண்ணே வாழ்கின்ருன்,” என்று கூறினுள். -

பேகன், பரத்தையபொழுக்கம் உடையான் என்பது கேட்ட பரணர் அவன்பால் பெருவெறுப்புற்ருர் ; பேகன் தவறினுன் எனினும், திருத்தி நல்வழிப்படுத்தல் கூடும் என்று நம்பினர்; அதைச் செய்வது தம்போன்றார் கடமை என்றும் எண்ணினர் ; நட்பு, நகுதற்பொருட்டு அல்ல, தவறு கண்டவழி, மேற்சென்று இடித்தற்பொருட்டு. அன்ருே உடனே, பேகன்வாழும் நல்லூர் சென்றார்; ஆங்கே, தம்மைப்போன்றே, கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றார்கிழார் முதலிய புலவர்பெருமக்கள் பேகனேடிருந்து அறிவுரை கூறுவதைக் கண்டார்; அப் பணியில், அவர்க்குத் துணையாய்ப் பேகனை நோக்கி, பேக!

மயில், வர்ண்டகண்டு வருக்காது, மகிழ்ந்த ஆடும் இயல்பின