பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர்கள் 87

இன்னேம் ஆயினேம் மன்னே என்றும் உடா,அ, போரா ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன், எத்துணே யாயினும் ஈத்தல் நன்றென மறுமை நோக்கின்ருே வன்றே : பிறர், வறுமை நோக்கின்று அவன்கை வண்மையே.”

- - (புறம்: கசக) (6) மலையமான் திருமுடிக்காரி:

தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களாகிய முவேந்தர் வழிவந்தோர் ஆண்டுகொண்டிருந்த அந்தக் காலத்திலேயே, அவர்களுக்கு அடங்கியும், அடங்காமலும், அதியர், ஆவியர், மலேயர், வேளிர் போன்ற வேறு இன அரசர்களும் ஆண்டுவந்துள்ளனர்; மூவேந்தர்கள், குறிப் பிட்ட எல்லைக்குட்பட்ட காட்டை ஆண்டுவந்தது போன்றே இக்குறுநில மன்னர்களும், தங்கள் ஆட்சிக்குரிய நிலமாக, ஒரு எல்லைக்குட்பட்ட நாட்டைப்பெற்று விளங்கினர்; அத்தகைய அரச இனங்களுள் ஒன்ருகிய மலையர் அல்லது மலையமான்கள் என்பவர், தென்ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளதும், திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டது மான நாட்டை ஆண்டுவந்தனர்; அந்நாடு, பண்டைக் காலத்தில், மலாடு அல்லது மலையமானடு என்ற பெயர் பெற்றிருந்தது ; அது காடும், மலைகளும் சூழ நடுநாட்டில் இருப்பதால், கடலாலோ, பகைவர்களாலோ அழிவுறும் என்ற அச்சம் அற்றிருந்தது. அந்நாட்டிடையே, முள்ளுர், என்ற அழகிய பயன்மிக்க மலேயொன்றும் இருந்தது; அந்தணர் பலர், அங்காட்டைத் தங்கள் வாழ்விடமாக

விரும்பி மேற்கொண்டிருந்தனர்.

அங்காடாண்ட மலேய மன்னர்களுள், திருமுடிக்காரி என்பவன் சிறந்தவளுவன்; வள்ளல் எழுவருள் ஒருவன் என்ற புகழிற்குரியான்; தன்னைப் பாடிவரும் பாணர், கூத்தர், புலவர் முதலிய இரவலர்க்குக் களிறும், தேரும்