பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பெண்பாற் புலவர்கள்

பாய்ந்து வளங்கொழிக்கும் சோழவளநாடு, பங்காளிப் போரால் பாழடைந்துவிட்டது , நல்ல அரசை இழந்து விட்டது. அந் நாடு ; அக் காட்டு அரியனேக்கு வரவேண் டியவனே மிகவும் இளைஞன்; அவன் காயத்தார் அவனே யும் அழித்தொழிக்கத் திட்டமிட்டுவிட்டனர். அஃதறிந்த அவன், தங்கள் குலத்தின் பால் குன்ருத அன்புடையவர் களும், தங்களுக்குத் துயர் வந்தபோதெல்லாம் துணைபுரி வோரும் ஆகிய மலேய மன்னர்கள்பால் வந்து அடைக்கலம் புகுந்தான் ; அப்போது அக் காடாண்டிருக்தோன் திருக் கண்ணன். அவன் தங்தையும் அப்போதுதான் இறந்து விட்டான். ஆகவே, தானே முன்வந்து, தன் தங்தை தோழன், சோழர்குல இளவரசலுக்குத் துணைபுரிந்தான் ; பகைவர் அணுகுதற்காகத் தன் முள்ளூர் மலையிடத்தே வைத்துக் கேடொன்று மின்றி அவனேக் காத்தான் ; இறுதி யில் அவன் பகைவரையும் அழித்து அவனேச் சோழநாட் டிற்கு அரசனுக்கி, அரசிழந்து அல்லல்உற்ற அந் நாட்டு மக்கள் துயரையும் போக்கினன்.

இவ் வரலாறுகளே யெல்லாம் விளங்க உரைத்துவந்த நப்பசலையார், தந்தை இறப்பத் திருக்கண்ணன் தோன்றி, தன் தங்தை தொண்டினேத் தான் மேற்கொண்ட சிறப் பிளேப் பாராட்ட விரும்புகிருர், அவன் தந்தை மறை வால் உண்டான் கேட்டின் மிகுதியையும், அதைப் போக் கும் வகையில் திருக்கண்ணன் தோன்றிய காலத்தின் அருமையையும், அவன் முன்வந்தது கண்டு மக்கள் கொண்ட மகிழ்ச்சிப்பெருக்கையும் விளக்க ஒர் அரிய அழகிய உவமையினே அமைக்கின்ருர்,

கொடிய கோடைகாலம்; அக் கோடையும் குறுகிய தாகாது, நீண்டு செல்கிறது ; கோடைக் கொடுமையால் மலைகள் வெப்பர் தாழாது வெடித்துப் பொடியாகின்றன. காடுகள் எல்லாம் தீப்பற்றி எரிகின்றன ; நீர் கிறைங் திருந்த நீர்நிலைகள் பலவும் அந் நீர் முற்றும் வற்றி உலர் கின்றன; இங்கிலையில் கோடை நீளுகிறது; இக் கோடை

யின் கொடுமை கண்டு மக்கள் கண்கலங்குகின்றனர்.