பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாருேக்கத்து நப்பசலையார் 97.

கோடை, இவ்வாறு கொடுமை பளித்துக்கொண்டிருக் குங்கால், திடீரென, வானம் இருண்டு, இடியும் மின்னலும் கலந்து, மண்னும் பிளந்து போகுமாறு பெருமழை பெய் யத் தொடங்கிவிட்டது : மக்கள் மனத்துயர் மாய்ந்தது ; மகிழ்ச்சி பொங்கிற்று.

இக் காட்சியைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத் திக் கோடையின் கொடுமைபோன்றது திருக்கண்ணன் தங்தை மறைவு என்றும், பெருமழை பெய்ததுபோல வந்து முன்கின்ருன் திருக்கண்ணன் என்றும் உவமை கூறி, கோடையின் கொடுமைகாண நடுங்கிப், பெருமழை காண மகிழும் நம் பசலையார் தம் மனித உள்ளத்தைத் திறந்து காட்டுகிருர்,

“ கவலை கெஞ்சத்து அவலந்தீர

நீ தோன்றினையே ; கிாைத்தார் அண்ணல் கல்கண் பொடிய, கானம் வெம்ப, மல்குர்ே வரைப்பின் கயம்பல உணங்க கோடை டிேய பைதறுகாலே இருகிலம் நெளிய ஈண்டி உருமுாறு கருவிய மழைபொழிந்தாங்கே.’ (புறம் : க.எச)

இம் மூவரையேயன்றி அவியன் என்ற ஒரு தலைவனே யும் பாடியுள்ளார் பசலையார். கோழிக்குரல் கேட்டு, எழுந்து கொடுமைசெய்யும் குளிரையும் பொருட்படுத் தாது சென்று அவனைப் பாடியதையும், தன் பாடல் கேட்ட அவனும், தன் தகுதியறிந்து வரவேற்றுச் சிறப்புப் பல செய்து, பாம்பின்தோல் போன்றனவும், பெரு மூங்கிலி லுள்ளே பிரித்தெடுக்கப்படும் வெள்ளிய மெல்லிய தோல் போன்றவுமாய அழகிய ஆடைகள் பல அளித்ததையும் விளக்கிவிட்டு, அத்தகையான் ஒருவனேப் பெற்றுவிட்ட காணத்தால், வறுமை என்னே வாட்டாது ; மழை இன் மையால் காலமே கெடினும் கவலைகொள்ளேன் ; மழைக் கோளாகிய வெள்ளி எங்குச் செல்லினும் அதுகுறித்து இனி வருக்தேன்,' என்று பெருமிதம் தோன்றக் கூறி யுள்ளார்:

பெ. பு.-7