பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பெண்பாற் புலவர்கள்

அழைக்கப்பட்டது: போர் நிகழ்த்த இடத்தைப் பறந்தது. என்று அழைத்தனர் பண்டைக்கால மக்கள்: Լ1{: Լք) Լյ பறந்தலை, வாகைப் பறந்தலே எனவும் வருதல் காண்க. போரில் கரிகாலன் எய்த அம்பு ஒன்று, சேரலாதன் மார்பில் தைத்து ஊடுருவிச் சென்று, முதுகுவழியே வெளிவந்துவிட்டது; அதனல், அவனும், அவன் படையும் தோற்றனர். ஆனல், சேரலாதன் இறந்தானல்லன் ; புறப்புண் பெற்றது காண உள்ளம் காணினன். மானம் அழிந்து வாழும் வாழ்வும் வாழ்வா என எண்ணிஞன் ; வாழ்வை வெறுத்தான் ; உடனே கையில் வாளேந்தி, வடக்கு நோக்கி அமர்ந்து, உண்ணுது இருந்து உயிர் இழந்தான்; இவையெல்லாம் தன் ஊர் அருகிலேயே சிகழ்க் தமையால் அவற்றை நன்கு உணரும் வாய்ப்பு புலவருக்குக் கிட்டியது. படையைப் பாழ்செய்து பெற்ற கரிகாலன் வெற்றிச் சிறப்பையும் கண்டார்; தோற்ற சேரலாதன், புறப்புண் பெற்றமைக்கு நாணி, வடக்கிருந்து உயிர்விட்டுப் பெற்ற புகழ்ச் சிறப்பையும் கண்டார். இவ்விரு சிறப்புக் களில் சிறந்தது எது என ஆராய்ந்து கண்டார்; வென்று கொண்ட புகழினும், வடக்கிருத்து பெற்ற புகழே அவருக்குச் சிறந்ததாகத் தோன்றியது. வெற்றிக் களிப் போடு கிற்கும் கரிகாலனைக் கண்ட குயத்தியார், ' வடக் கிருந்து இறந்த அவன், வென்ற கின்னினும் நல்லன்” என்று சிறிதும் கூசாது கூறினர்.

' க்ளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி

வளிதொழில் ஆண்ட் உாவோன் மருக! களியியல் யானைக் கரிகால் வளவ! சென்று அமர்க்கடந்த கின்ஆற்றல் தோன்ற வென்முேன்! நின்னினும் நல்ல னன்றே களிகொள் யாணர் வெண்ணிப் பறக்தலே மிகப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் காணி வடக்கிருந் தோனே. (புறம் : சுசு }