பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு வெள்ளிவிதியார்

மதுரையில் வெள்ளியம்பலவீதி என்ருெரு வீதி புண்டு ; அது வெள்ளிவீதி எனக் குறைந்தும் வழங்கப் பெறும். அவ் வீதியில் வாழ்ந்தமையால், சிலர் இவர் வெள்ளிவீதியார் என அழைக்கப்பெற்ருர் என்பர். மக்கள் பெயரைத் தெருவிற்கு வைக்கும் இக் காலம்போலன்றி, அக்காலத்தில் தெருவின் பெய்ரை மக்களுக்கு வைத்து வழங்கினர்போலும். வெள்ளிவீதியார் தம்மையொத்த ஒரு புலவரைப் பாராட்டி, மற்ருெரு புலவரால் பாராட்டப் பெற்றுப் பெருமையடைந்தவராவர்; இவர் பாராட்டைப் பெற்ற புலவர் ஆதிமந்தியார்; இவரைப் பாராட்டிய புலவர் ஒளவையார் ; வெள்ளிவீதியார் பாராட்டிய புறத்தினத் தலைவர்கள் இருவர் ; ஒருவர் ஆதிமந்தியார் ; மற்ருெருவர் திதியன். ஆதிமந்தியார் வரலாற்றை முன்னரே அறிக் திருக்கிருேம் ; காவிரியில் மறைந்த தம் கணவனைத் தேடித் திரிந்த ஆதிமந்தி என்று அவர் வரலாற்றின் சிறப்புடைய பகுதியைக் குறித்துள்ளார். திதியன் சிறந்த போர்வீரன்; சேர்ந்தோர் துயர் தீர்க்கும் சிறப்புடையோன் ; அன்னி மிஞிலி என்பவள் ஒருத்தியும், அவள் தந்தையும் பசுக் காத்தல் தொழில் மேற்கொண்டு வாழ்ந்திருந்தனர்; ஒரு நாள் அவர்கள் பசு, கோசர் என்பவர்களுக்கு உரிய கிலத் தில் பயிரை மேய்ந்துவிட்டது. அச் சிறு குற்றத்திற்கு அவர்கள், அவள் தந்தையின் கண்ணேப் போக்கிவிட்டனர்; அதுகண்டு, அவரைப் பழிவாங்காமுன் உண்ணேன் என்று சூளுரைத்துத் திதியனிடம் சென்று முறையிட்டாள் ; அவன் அவரைக்கொன்று அவள் துயர்தீர்த்தான்; அன்னி என்பவன் திதியனேடு பகைத்தான்; பலர் தடுத்தும் கேட்கவில்லை; குறுக்கைப் பறந்தலே என்னுமிடத்தில் இரு வருக்கும் கடும்போர் நடந்தது; களத்தில் அன்னி இறக் தான்; திதியன், அன்னியின் காவல் மரமாகிய புன்னேயை அழித்து மகிழ்ந்தான்; திதியன் பெற்ற இவ் வெற்றிச் சிறப்பையும், அதைக் கண்டு பாணர், கூத்தர் முதலியோர்