பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அள்ளுர் நன்முல்லையார் ಏ

கூருது, தாம் பிறந்து வாழ்ந்த தம் அள்ளூரையே ஒப்புக் கூறுகின்ருர்; தம் ஊர்கினவு வந்தவுடனே, அவ்வூரின் சிறப்பெல்லாம் அவர் மனக்கண்முன் வந்து சிற்கலாயின : அவ்வூசெங்கும் மலைபோல் குவிந்துகிடக்கும் செந்நெற் குவியல்களை கினைந்து கினைந்து மகிழ்ந்தார்; ஊர்ப்பற்று 22:Gr கின்றுவிடவில்லை; அவர்க்கு ஊராளும் அரசனே யும் கினைப்பூட்டிற்று. பகைவரின் யானேப்படையையும் கொன்றழிக்கும் தம் அரசன் வாட்படை, அவ்வாட்படைக் குத் தலைவனுகிய தம் அரசன் கொற்றம் ஆகிய அவ்வள வையும் எண்ணி எண்ணி இறும்யூதெய்தினர் அவர் ; "இவ்வளவு சிறப்பும் உடையது எங்கள் ஊர்” என்று பாராட்டிஞர் : '

' செறுநர், களிறுடை அருஞ்சமம் ததைய ஆாறும், ஒளிறுவாள் தானேக் கொற்றச் செழியன் பிண்டகெல்வின் அள்ளுர்’ (அகம் : சசு)

என்று பாடினர்.

அவர் பாடிய இப் பாட்டினல், அவர் பாண்டி நாட் டினர் என்பதும், அவர் ஊராகிய அள்ளூர் நீர்வளமும் நிலவளமும் மிக்க மருதவயல்கள் சூழ்ந்தது என்பதும் அறியப்படும்.

அள்ளுர் என்முல்லையார் பக்திற்கு மேற்பட்ட பாடல் களைப் பாடியுள்ளார்; எனினும், அவற்றுள் ஒன்றும், அவர் வாழ்க்கை வரலாற்றை அறியத் துணைபுரிவன அல்ல; அவை, அவர் வாழ்க்கையை அறிய வழி காட்டவில்லை எனினும், அவர்தம் புலமையின் சிறப்பைப் புலப்படுத்த அவை சிறிதும் தவறவில்லை. அள்ளூர் நன்முல்லையார், நல்லிசைப் புலமை வாய்ந்த நற்பெருங் கவிஞர் ; கண்ணில் கானும் காட்சிகளைக் கருத்தோடு இழைத்துக் கவி பாடும் இயல்பினர்; அவர் பாடல்களில் பொதிந்துகிடக்கும் உவமைகள் சிலவே, அவர் புலமைச்சிறப்பைப் புலப்