பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிவீதியார் 105

தார் வெள்ளிவீதியார் ; ஆகவே, அவனுேடு தொடர்பின்றி வாழத் தொடங்கினர்; அங் கிலேயைப் பொறுக்கமாட்டாத அவன், ஒருநாள் வெள்ளிவீதியாரை நெருங்கி, ஆணை விட்டுக் கூறுகிறேன்; நான் எத்தகைய தவறும் செய்தி லேன்,” என்று கூறினன். ஆனல் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை; மாருக ! உன்னுேடு இன்றுவரை வாழ்ந்த வாழ்வு போதும்; இனி, அதை நான் விரும்பேன் ; உன் னேக்கண்டதும் சிரித்து மகிழ்ந்த இந்தப் பற்கள் உடை பட்டும்; எனக்கு வாழ்வும் வெறுத்துவிட்டது.; ஆகவே என் உயிரும் அழியட்டும்,' என்று கடுஞ்சொற்களே அவன் மீது அள்ளி வீசிவிட்டார்.

" நான் தவறு செய்யவில்லை; அவளிடத்தில் அதை ஆணையிட்டு அறிவித்தேன்; அவள் ஏற்க மறுத்துவிட் டாள்; இனி இங்கிருந்து பயனில்லை,” என்று எண்ணி எங்கோ சென்றுவிட்டான் அவன்; பல ஆண்டுகள் ஆயின; வெள்ளிவீதியார் உள்ளத்தில் அவன் தவறு செய்திலன் என்ற எண்ணம் மெல்ல மெல்லத் தோன்றிற்று ; உடனே, அவன்பால் பண்டேபோல் அன்பும், இசக்கமும் உண்டா வின; உண்டாகி யாது பயன்? அங்கிருந்தால்தானே அவனே படையலாம் ? அவன்தான் எங்கோ சென்றுவிட்டானே : என்ன செய்வார்ரி பாவம் ! கிலவைக் காண்கிருர் ; கடல் போல் பரந்த அதன் பேரொளி தன் உயிரை வாட்டுவதை உணர்கிருர் ; ஊரில் விழா கிகழ்வதைக் காணுகிருர் ; விழாக் காணக் காதலனும் காதலியுமாய்ச் செல்வோர் காட்சி, தம் கண்ணே உறுத்திக் கவலையைப் பெருக்குவதை உணர்கிருர், பொழுதுபோக்கப் பூஞ்சோலைக்குப் போகிருர்; அங்கே தம் துனேவியோடிருந்து தேன் உண்ணும் வண்டு கள் தம் வருத்தத்தை வளர்ப்பதை உணர்கிருர், எங்குச் செல்லினும் அவருக்கு அமைதியில்லை; உலகமே தம்மோடு பகைகொண்டு போரிடுவதாக கினைக்கிருர்; அழுகிருர் ; தம் தோழியை அழைத்து ' என் காமம் பெரிதே; களஞ ரோவிலரே ; நான் யாது செய்வேன்!” என்று கவலைப் பட்டார். -