பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பெண்பாற் புலவர்கள்

யுள். இவ்வாறு, பல்வேறு கோணங்களில் கின்று வெறி யாடல் சிறப்பை விரித்துரைத்த நயம்கண்டு மகிழ்க.

'முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்

ஆரம் காற, அருவிடர்த் ததைக்க சாால் பல்பூ வண்டுபடச் சூடிக் களிற்றிரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல நன்மனை நெடுநகர்க் காவலர் அறியாமைத் தன்னசை உள்ளத்து நன்னசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்குகொறும் மெய்ம்மலிந்து நக்கனென் அல்லனே யானே எய்த்த நோய்தணி காதலர் வரவு ஈண்டு ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே. (அகம் : உஉ)

காமக் கண்ணியார் பாடிய புறப்பாடல் இரண்டு ; ஒன்று, மதிலையும் அகழியையும் காத்துகின்ற வீரர்கள் போரிட்டு இறந்ததைப் பாராட்டும் செருவிடை வீழ்தல் என்ற துறை தழுவியது; மற்முென்று, ஒரு வீரனுடைய குதிரை, போர்க்களத்தே ஆற்றிய ஆண்மையைச் சிறப் பித்துக் கூறும் குதிரை மறம் என்ற துறை தழுவியது.