பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊண்பித்தை 15.

தியே யிருக்கும். ஆகவே அவன் விரைவில் வருவான் என்னும் உறுதியுடையவள் தோழி. ஆனல், அவன் கூறிச் சென்ற காலமெல்லாம் கடந்தும் அவன் வரவில்லை; அத ஞல், தலைவி அவன் தன்னை மறந்துவிட்டான் என்றே உறுதியாக எண்ணுகிருள். அக் கிலேயில், அவளிடத்தில் சென்று, அவன் மறவான்’ என்று வெளிப்படையாகக் கூற அஞ்சுகிருள் தோழி : என்ருலும், அவள் அதைக் கூறக் கடமைப்பட்டவள். ஆகவே, தலைவியின் கருத்தை யும் ஏற்றுக்கொள்வாள் போல், அவர் சம்மைப்பற்றி சினேக்கவே மறந்துவிட்டாரோ?” என்ற ஐயத்தை எழுப் பிப் பின்னர், அதை மறுப்பாள்போல், அல்லது, வந்த வேலையை விரைவில் முடித்துக்கொண்டு மீள்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கவில்லையோ?’ என்று ஐயப்படுவாள் போல்கூறி, அவன் வாமைக்குள் காரணம் அதுவே: அவன் மறதி அன்று’ என்று துணிந்து கூறித் தலைமக. ளேத் தேற்றினுள்.

இக் கருத்தடங்கிய பாடலைப்பாடி, 'அறிவே உருவான வள் கோழி' என்ற அகத்திணைக் கொள்கைக்கு அரண் செய்தார் ஊண்பித்தை :

' உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்

வாய்ப்புணர்வு இன்மையின், வாாார் கொல்லோ ? மால்புகாஅருக்கிய மாவெருத்து இாலே உாற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரிiழல் துஞ்சும் மாயிரும் சோலே மலேயிறங் தோரே..” (குறும் : உங்.உ)

جمجمه مسجمعجمیب-----------