பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. கச்சிப்பேட்டு* நன்னுகையார்

நாகையார் என்பதே இவர் இயற்பெயர்; இது நல்ல வர் எனச் சிறப்பிக்கவரும் கல் என்ற அடையைப் பெற்று நன்னகையார் என்று ஆயிற்று. இவர் பெயர் சில இடங் களில் நன்னுகையார் எனவும், சில இடங்களில் கச்சிப்பேட்டு நன்னுகையார் எனவும் வருகிறது; தொண்டைநாட்டில் சிறப்புற்ருேங்கிய காஞ்சிமாநகரை அடுத்துக் கச்சிப்பேடு என்ருேர் ஊர் உளது. ஒரு நகரத்தின் புறத்தே அதைச் சார்ந்து இக்காலத்துச் சந்தைபோல் நாள்தோறும் கிகழும் வணிக நிலையத்தைக் குறிக்க வழங்கிய பேட்டு என்ற பெயர் இன்று பேட்டை எனத்திரிந்து வழங்குகிறது. கச்சிப்பேடு, புலவர் பலர் வாழ்வால் பெருமையுற்றது. இளந்தச்சனுர், பெருந்தச்சனுர், காஞ்சிக்கொற்றனர் முத விய புலவர்களேப் பெற்றெடுத்த பெருமையும் அதற்குண்டு.

நாகையார் பாடிய பாடல்கள் எட்டு ; அவை அனைத் தும் குறுந்தொகை என்ற ஒரு நூலிலேயே தொகுக்கப் பெற்றுள்ளன. இவர் பாடல் முழுதும், கணவன் பொருள் குறித்துப் பிரிந்தான் என்பது கண்டு மனேவி ஆற்ருமை; அவள் ஆற்ருமைகண்டு தோழி ஆற்றுதல் என்ற பொருள் வயிற்பிரிவே பொருளாக அமைந்துள்ளன. இவர் மேற் கொள்ளும் உவமைகள் மிகச் சிறந்தனவாதலேயன்றி, அரியகருத்துக்கள் சிலவற்றைத் தெரிவிப்பனவாகவும்

●一g了○溶「リ「。

கணவன் பிரிவால் மனே விக்கு உண்டான வருத்தம் சிறிதும் குறைதலின்றிப் பெருகிற்று என்பதற்குக் கொல் லன் உலையில் காற்றடிக்கும் துருத்தியின்தோல் சிறிதும் ஒய்வின்றித் தொழிலாற்றப்படுவதை உவமை கூறியுள் ளார். ஊருக்கு ஒரு உலை என்று இருந்தால், அத்துருத் திக்கு ஒய்வு சிறிது கிடைப்பினும் கிடைக்கும்; துருத்தி யின்தோல் ஆட்டப்பெருமல் அமைதி கொள்ளுதலும் கூடும். ஆகவே, அத்தோல் சிறிது அமைதியுறுவதே

(பாடம்) . கச்சிப்பெட்டு.