பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பெண்பாற் புலவர்கள்

கால அறிஞர்கள், அவ் வம்மையாருக்கு அளித்த பார்ட் டுப் பெயராகும். -

தமிழ்மகன் ஒருவனும், தமிழ்மகள் ஒருத்தியும் தனிக் குடித்தனம் செய்கிருர்கள்; அவ் விருவர் பெற்ருேரும் பெருஞ் செல்வர்களே என்ருலும் தான் முயன்று ஈட்டிய பொருளேக்கொண்டே தன் வாழ்க்கையை நடத்துதல் வேண்டும் என்ற தனிப் பேருள்ளம் உடையவன் தமிழ் மகன்; அவன் மனேவியும் அதுவே அறநெறி என்று உணர்ந்தவள். ஆகவே, அவன் அவளே வீட்டில் விட்டுப் பொருள்தேட வெளிநாடு சென்றுவிட்டான்; செல்வது அறம் என்று கருதி அவனேச் செல்லவிட்டாள் என்ருலும், பிரியாத அவன் பிரிந்து சென்றதால் பெரிதும் வருத்துவா ளாயினுள் ; நாள் செல்லச்செல்ல வருத்தம் மிகுந்து கொண்டே வந்தது ; வருத்தம் மிகமிக, அவள் உடலின் வனப்பும் வளமும் குன்றத் தொடங்கின. சென்றவன் எவ்வளவு தொலைவு சென்றுள்ளான் சென்ற காட்டின் தன்மை யாது ? சென்ற இடத்தில் அவன் நலம் எவ்வா அளது எப்போது அவன் வருவான் என்பனவற்றை அறிந்து கொள்ள முடியாக காலம் அது. அதனல், அவன் காலம் தாழ்த்தத் தாழ்த்த அவளுக்குக் கவலை மிகுந்து கொண்டே வந்தது. அவள் உடல்நலம் முற்றும் கெட்டு விட்டது. இங்கிலேயில், ஒருநாள் காலே ஒரு காக்கை அவள் வீட்டுக் கூரையில் வந்து உட்கார்த்தது. வந்த காக்கை வாயைத் திறந்து கா, கா” எனக் கரைந்தது ; காக்கை கரைந்தது கேட்டாள் அவள் , துள்ளிக் குதித்தது அவள் உள்ளம்; துன்பம் குறைந்தது ; இன்பம் மிகுந்தது ; உடலும் பண்டேபோல் வனப்பும் வளமும் பெற்றது ; காரணம், காக்கை கரைத்தால் காதலர் மீள்வர் ; விருக் தினர் வருவர் என்பதை உறுதியாக நம்பினர் அக்கால்த் தமிழர்கள். வெளிநாடு சென்ருேர் வருகையை அறிவிக் கும் வாய்ப்பு அவர்களுக்கு அஃது ஒன்றே. ஆகவே, கசக்கை கரைந்தது : வேற்றார் சென்ற அவர் விரைந்து வருவார் என்று நம்பினுள்; உவகை கொண்டாள்.