பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவற்பெண்டு 41

எண்ணினல் நேரே போர்க்களம் செல்வேன்; அவன் அங்கே யிருப்பது உறுதி; காண்பேன்; மீள்வேன்; இப் போதும் அவன் அங்கேதான் இருப்பான்” என்று கூறினர்:

சிற்றில் நற்றுண் பற்றி நின்மகன் யாண்டுள னே?என வினவுதி ; என்மகன் யாண்டுள ஞயினும் அறியேன் , ஒரும் புலிசேர்ந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிருே இதுவே , தோன்று வன் மாதோ போர்க்களத் தானே. (புறம்: அ சு)

இப்பாட்டு ஒன்றினலேயே, காவற்பெண்டின் மறக்குடி உள்ளத்தின் மாண்பும், அக்கால இளைஞர் தம் கடமையில் சிறிதும் கவருள்; ஆகவே, தாய் கங்தையர் அவர் ஒழுக்கங் குறித்துச் சிறிதும் கவலைகொள்ளார்; மக்களைப் பெற்றுப் பேணிவிடுவதே தம் கடன்; அஃதோடு அவர்க்கும் தமக்கும் உள்ள உறவு அற்றது ; இனி அவர், அவர்கடன் ஆற்றச் செல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பதன்றி, என்றும் தம் அருகிலேயே யிருந்து தமக்கு வேண்டுவனவே புரிந்து கொண்டிருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது அறிவுடைமை யன்று என்றே அக்காலப் பெற்ருேர்கள் கருதினர் என்ற உண்மைகளும் வெளியாதல் காண்க. இவ்வளவு கருத்துக் களையும் தம் சிறுபாட்டு ஒன்றினலேயே விளங்கவைத்த காவற்பெண்டின் புலமைச் சிறப்ப்ே சிறப்பு !