பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறமகள் இளவெயினி 45.

ஏறைக்கோனைப் பாராட்டிய பாட்டில், சிறந்த பல குணங்கள் எறைக்கோன் ஒருவனிடத்திலேயே உள்ளன; பிறர் எவரிடத்தும் அவற்றைக் காண முடியாது என்று கூறினர் ; அவ்வாறு கூறுமுகத்தான், கல்லோர்பால் இருக்கவேண்டிய கற்குணங்கள் இவை இவை என்று உலகோர்க்கு எடுத்துரைத்துதவியுள்ளார்.

நம்மோடு நட்புக்கொண்டு நெடுநாள் பழகி வாழ்பவர் ஒரோவழி தவறு செய்துவிட்டால், அவர் தவறு செய்து விட்டனரே என்று வெகுண்டு, அவரோடு அன்றுவரை கொண்டிருந்த தொடர்பை மறந்து, அவரைப் பகைத்துக் கொண்டு, அவர்க்குத் துயர் தருதல் கூடாது ; அது சான்ருேர் செயலன்று. -

இரப்பாரைக் கண்டு எள்ளி நகைத்தலும், பிறர் வறுமை கண்டு வாட்டம் கொள்ளாது, அதைத் தன் வாழ்வின் உயர்விற்குப் பயன்படுத்திக் கொள்வதுமே இன்றைய உலக நிலை. இங்கிலே இருப்பதாலேயே உலகம் அமைதி இழந்து அல்லல் உறுகிறது. நாடெல்லாம் வாழக் கேடொன்றும் இல்லை ” என்ற உண்மையை உணர்ந்து தன்னேப் போன்றே உலகோர் அனைவரும் உயர்ந்து வாழ வேண்டும் என்று விரும்பி, அதற்காக உழைப்பதே தனக்கும் பிறர்க்கும் கலம் தருவதாம். இதை உணர்ந்தவர் மட்டுமே, வாட்டம் ஒருபாலும், ஆட்டம் ஒருபாலும், வறுமை ஒருபாலும், செழுமை ஒரு பாலும் இருப்பது காண உளம் கடுங்குவர். அங் நடுங்கும் உள்ளம் எல்லா மக்களுக்கும் உண்டானுல், உலகம் அன்றே உயர்ந்துவிடும்.

‘எப்படியாவது வெற்றிபெற வேண்டும்; எம்முறை யைக் கையாண்டாவது வெற்றி காணவேண்டும்' என எண்ணுவது பேடிச்செயல்; இன்றைய உலகப் போர்த் தலைவர்கள் அதையே போர்த் தந்திரம் எனப் போற்று கின்றனர் ! உண்மை வீரன், வெற்றி கரும்வழி, பழிதரும் வழியாக இருத்தல் கூடாது என்பதில் கருத்துட்ைய வைன்;