பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. பாரி மகளிர்

பாண்டி காட்டில் பறம்பு என்ருேர் மலையுண்டு ; அது மிகவும் உயர்ந்தும் அகன்றும் விளங்கிற்று ; அதனல் என்றும் நீர் அருத அருவிகள் பல அம்மலையில் பாய்க் தோடிக்கொண்டிருந்தன ; அவ்வருவிகளே பல்லாமல், இனிய குளிர்ந்த நீர் நிறைந்த சுனைகள் பலவும் அம்மலையில் உண்டு. இவ்வாறு நீர் வளம் கிறைந்திருந்ததால், அம் மலே மண்வளத்திலும் சிறந்திருந்தது; அதனுல் பலா போன்ற பழவகைகளும், வள்ளிபோன்ற கிழங்கு வகைகளும், நெல் போன்ற உணவு வகைகளும் கிறையக் கிடைக்கும்; இனிய தேன் வகைகளுக்கும் இருப்பிடமாயிருந்தது அம் மலை. இவ்வாறு எல்லா வகையாலும் சிறந்த அம் மலையைச் சூழ முந்நூறு ஊர்களும் இருந்தன; அம் முந்நூறு ஊர்களைக் கொண்ட நாட்டிற்கும் அம் மலையின் பெயராகிய பறம்பு

என்பதே பெயராக அமைந்தது.

அப் பறம்பு மலையையும், அப் பறம்பு நாட்டையும் ஆண்டுவந்தான் பாரி என்னும் பெருவீரன் ; பெரிய காடைவள்ளல்; அன்பும் அருளும் உடையான்; அறி வுடையோரை ஆருயிர் நண்பராகக் கொள்ளும் அவாவுடை யான் ; அவன் நண்பர்களுள் சிறந்தவர் கபிலர் என்ற முது பெரும் புலவர் ; அவனுக்குப் பெண்மகளிர் இருவர் இருந் தனர்; அவர்கள் பெயரை அறிந்துகொள்ள முடியாத கார ணத்தால், பண்டைத் தமிழர்கள் அவர்களைப் பாரிமகளிர் என்று அழைத்தனர் ; ஆகவே, நாமும் அவர்களே அவ்வாறே அழைப்போம்; தமிழ் நாவலர் சரிதை என்ற ஆால் மட்டும் அவ்விரு மகளிர்க்கும் அங்கவை, சங்கவை என்று பெயரிட்டு அழைக்கின்றது.

பாரிமகளிர் தம் தந்தையைப் போன்றே அன்பும் அருளும் உடையவர்; அறிவிற் சிறந்தவர் ; தந்தை பாரி புலவர்களே அழைத்து அவர் பாடல் கேட்டு மகிழும் பண்புடையனே தவிர, பாடும் ஆற்றலைத் தான் பெற்றவ னல்லன்; ஆனல், அவன் மகளிரோ, அருங்கவி பாடும் அறிவுடையவர்; புலவரும் போற்றும் புலமையுடையவர்.