பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பெண்பாற் புலவர்கள்

அகப்பட்டதா? இல்லையே? நீர்நாய் அன்ருே அகப்பட்டது? மணம் பேச வந்தவர் செயலோடு அதை ஒப்பிட்டுப் பார்; இவர்கள் என்னை மணம் பேசவே வந்திருக்கின்றனர் என்பது உண்மை ; ஆனல், இவர்கள் என்னைப் பெறப் போவது இல்லை; இவர்களுக்குக் கிடைக்கப்போகிறவள் நான் அல்ல ; வேறு எவளோ ; ஆகவே, மணம் பேசவத்து விட்டனரே என்று கவலற்க ; மனம்பேச வந்தவுடனே அவர்கள் எண்ணம் ஈடேறிவிடும் என்று எண்ணுதே; அவ்வாறு ஒன்றும் நடவாது ; அஞ்சற்க,’ என்று கூறினுள்.

காணினி வாழி தோழி , யாணர்க்

கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து இட்ட

மீன்வலை மாப்பட்டாங்கு

இது ; மற்று எவனே நொதுமலர் தலேயே.”

காக்கைபாடினியார், நச்செள்ளையார், ஒக்கூர்மா சாத்தியார் போன்ற புலவர்களைப்போலவே, இவரும் தமிழ் நாட்டு வீரத்தாய்மார்களின் இயல்பை விரித்துரைத் துள்ளார்.

ஒரு கிழவி ; அவள் தலைமயிர் முற்றும் கொக்கின் இறகேபோல் வெளுத்து நரைத்துவிட்டது; அவளுக்கு ஒரே மகன்; அவனே மிகவும் சிறியன். எனினும் நாடு காவற் போரில் தன்குடியும் பங்குகொள்ளுதல் வேண்டும் என்ற கருத்தினள் ஆதலின், இளேயன் என்றும் பாராது போருக்கு அனுப்பினுள் ; அவனும் தன் குடிப்பண்பிற்கு ஏற்பக் களத்தே களிறு பலவற்றைக் கொன்ருன் ; ஆனால், இளேயணுகிய அவனுல் தொடர்ந்து போரிடமுடியவில்லை ; பகைவர் படைக்கலம்பட்டு வீழ்ந்து மாண்டான் ; காலையில் களம் நோக்கிச் சென்ருேன், மாலையில் வெற்றியோடு வீடு திரும்புவான் என்று எதிர்நோக்கியிருந்தாள் கிழவி ஆனல், அவன் வரவில்லை ; வீரர் பலர் அவள் வீட்டிற்கு வந்தனர்; “கின் மகன் மிகவும் இளைஞன்தான்; ஆனுலும் அவன் ஆற்றிய போருண்டே ஆ ஆ! அருமை! அருமை!!