பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்கோழி நாய்கன்மகள் நக்கண்ணையார் 71

குர்; ஆல்ை, அவன் தோள் தளராது முன்னிலும் பருத்து இருப்பது கண்டு மகிழ்ந்தார்; அவன் தோள் தமக்கு உரிமையாகி இன்பம் அளிக்காது வருத்துகிறது என்பதை யுணர்ந்தும் எதிர்த்த பகைவர் எவரையும் எளிதில் வெல்லும் அதன் ஆற்றல் கண்டு அகமகிழ்ந்தார்.

மல்லர்க்கும், மற்போருக்கும் சிறந்தது அவ்வாமூர் ; மல்லருள் சிறந்தான் ஒருவன் அவ்வூரில் இருந்தான் ; அவன் சிறப்பறிந்த அவ்ஆார் அவனே ஆமூர் மல்லன் என்றே அழைத்தனர். தான் வாழும் ஊரில் தன்னினும் வலியான் ஒருவன் வாழ்வதா என்ற எண்ணத்தால் ஆமூர் மல்லற்கும் கிள்ளிக்கும் பகை உண்டாயிற்று. பகை வளர்ந்து ஒரு நாள் இருவரும் மற்போர் கிகழ்த்தத் தொடங்கிவிட்டனர்; ஊர்மக்கள் எல்லாம் போரைக் காண ஒன்று திாண்டுவிட்டனர். கிள்ளி அங்காட்டையோ, அவ்வூரையோ சேர்ந்தவனல்லன் ; ஆகவே, அவனியல்பறிய மாட்டாத அவ்வூர்மக்கள் போரின் முடிவு குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிடலாயினர். கிள்ளிக்கே வெற்றி ' எனப் பேசிச் சென்றனர் சிலர் ; கிள்ளிக்கு வெற்றி இல்லை’ எனப் பேசிச் சென்றனர் வேறு சிலர் ; இவ்வாறு ஊர் மக்கள் பேசிக்கொள்வது நக்கண்ணேயார் காகில் விழுந்தது ; காற்சிலம்பு ஒலிக்க ஓடினர்; மற்போர் நிகழும் இடத்திற்கும், தம் வீட்டிற்கும் அணித்தே உள்ள பனைமரத்தருகே கின்று மற்போரைக் கண் இமையாது கண்டு கின்ருர், கடைசியில் வெற்றி தம் காதலன் கிள்ளிக்கே கிட்டியது கண்டு மகிழ்ந்து மீண்டார்.

‘என்னைக்கு ஊர்இஃது அன்மை யானும், என்னைக்கு நாடுஇஃது அன்மை யானும், ஆடுஆ டென்ப ஒருசா ரோசே : ஆடன்று என்ப ஒருசா ரோரே : நல்ல, பல்லோர் இருநன் மொழியே ; அஞ்சிலம்பு ஒலிப்ப ஒடி எம்மில் முழாவாைப் போங்தை பொருக்கி நின்று - யான்கண் டனன்.அவன் ஆடுஆ குதலே.’ (புறம்: அடு)