பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பெண்பாற் புலவர்கள்

காட்டு இளைஞர், தம்கடன் அறிந்த காளேயர் ஆயினர்; நாடுகாவலை மேற்கொள்ள முன்வருகின்றனர்; ஆனல், களத்தே பயன்படுத்தப் படைக்கலம் பல தேவை ; படை வீரர் ஒவ்வொருவருக்கும் தேவையான படைக்கலங்களே அவரவரே செய்துகொள்வாராக என விடுவது அறி வுடைமையாகாது; அது, காலக்கேடும் பொருட்கேடும் பயப்பதாம் ; ஆகவே, ஒர் ஊரில் உள்ள வீரர் பலர்க்கும் வேண்டிய படைக்கலங்கள் அவ்வளவையும் செய்துதா, ஊர்தோறும் ஒரு கொல்லனே அமர்த்தியிருந்தனர் அக் கால மக்கள். போருக்குச் செல்லப் படைவீரர் தயார் ஆயினும், அவர்களுக்குத் தேவையான படைக்கலங்களைத் தேவையான காலத்தே படைத்துத் தருவதில் கொல்லன் தவறிவிட்டால், அவ்வீரரால் போர்புரிந்து நாட்டைக் காத் தல் இயலாது; ஆகவே, வேண்டும் புது வேல்களே ஆக்கித் தருவதிலும், இருக்கும் பழைய வேல்களைச் செம்மை செய்து கூாக்கித் தருவதிலும் அவன் தவறக்கூடாது; எனவே, அக் கொல்லலும் தன் கடன் அறிந்தவளுதல் வேண்டும்; ஆகவே, வேல்வடித்துக்கொடுத்தல் கொல்லற். குக் கடனே' என்ருர், -

நாடுகாவலே மேற்கொள்ள வேண்டியவர்கள், ஒழுக்கங் தவறியவராயின் நாட்டிற்கே கேடாம்; ஆகவே, அவர்கள் ஒழுக்கத்திற் சிறந்த நல்லோராக விளங்குதல் வேண்டும். அதைப் பெற்ருேர்கள் செய்வது இயலாது; தாயும் தந்தை யும் தம் மக்களைத் தீயவழியிற் செல்லாவண்ணம் பாது காத்தல், அம் மக்கள் வீட்டோடு உள்ளவரையிலுமேதான் இயலும். மக்கள் வீட்டில் வாழ்காலத்தினும், வீட்டின் வெளியே வாழும் காலமே மிகுதியாம்; வீட்டிற்கு வெளியே, தாய் தந்தையர் தலைமறைவில் வாழும்போது மக்கள் தகாதன செய்தலும் கூடும்; அதை அப்போது அறிந்து திருத்துவார் யாரும் இராது போனல், அம் மக்கள் ஒழுக்கம் கெடுவர்; ஆகவே, அம் மக்கள் ஒழுக்கத்தில் விழிப்பாய் இருக்கவேண்டுவது வேந்தன் கடமை. ; காட்டு இளைஞர் கெட்டவராயின், அப்பழி அந் நாட்டு அரசனையும், ஆட்சிமுறையையுமே சாரும்; அவர்கள் நல்லொழுக்க