பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங். மாருேக்கத்து நப்பசலையார்

பாண்டிய நாட்டில் கொற்கை நகரைச்சூழ இருந்த நாட்டிற்குப் பழங்கால மக்கள் வைத்து வழங்கிய பெயர் மாருேக்கம் என்பது; மாருேகம் என்றும் சிலர் அழைப்பர்; அந் நாட்டு மக்கள், வீட்டிற்கு வெளியேசென்று விளையாடும் பேதைப் பருவத்து மகளிரைப் பெண்மகன் என்று கூறு வார்கள். அந் நாட்டுப் பெண்களுள் புலமையிற் சிறந்தவ ரொருவர் இருந்தார். அவர் பெயர் பசலையார் ; பசலையார் என்ற இப் பெயர், அவர் தாய் தங்தையர் வைத்த இயற் பெயரன்று ; பசலை என்ற நோயின் தன்மையை விளங்கப் பாடியதால் பெற்ற காரணப் பெயராம். இப் பெயரோடு, பெரும்புலவர்களுக்கு அவர் புலமையும் புகழும் கருதி அளிக்கும் 'ந' என்ற சிறப்படையும் சேர, நப்பசலையார் என்று அழைக்கப்பெற்ருர் ; பசலை யென்பது கணவன்மார் கல்வி, பொருள், போர் இவை குறித்துப் பிரிந்து வெளி நாடு சென்றகாலத்தில் அவர் மனேவியர்க்குத் தோன்றும் ஒரு நோய் ; அவர்கள் நெற்றி, கணவன்மார் உடனிருந்த காலத்தில் பெற்றிருந்த அழகும் ஒளியும் கெட்டு, கண்ணுடி யில் வாயில்ை ஊதில்ை, அக் கண்ணுடி ஆவி படர்ந்து ஒளி மழுங்குவதுபோல், வேறுபட்டுத் தோன்றும் ஒரு நோய். நற்றிணையில் தாம் பாடிய பாட்டொன்றில், இப் பசலை நோயை,

  • மணிமிடை பொன்னின் மாமை சாயனன்

அணிநலம் சிதைக்குமார் பச?ல.” -

(நற்றிணை : கட0ச) என்று நப்பசலையார் சிறப்பித்துக் கூறியுள்ளார்.

பாண்டிய நாட்டிற் பிறந்து தம் நாட்டுப் பற்றும் ஊர்ப்பற்றும் கெடாவகையில் தான் பிறந்த ஊர்ப்பெய ரைத் தம்பெயரோடு இணைத்து வழங்கும் நம் புலவர் பாராட்டிய அரசர்கள் அனைவரும் சோழர்குலத் தொடர் புடையவராகவே காணப்படுகின்றனர்; அவர் பாடல்

பெறும் பேறுபெற்ற அரசர்கள் மூவர்: சோழன் குளமுற்றத்