பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ேபய னு ர்

سمسمبلجیمساس۔

தோற்றுவாய்

தமிழ் இலக்கியம் ஒரு கரைகாணுப் பெருங்கடலாம்; பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் போலும் நூல் களேயும், பிற்காலத்தனவாய எத்தனையோ புராணங்கள், கோவை, உலா, அந்தாதி, மாலை போலும் நால்களையும் எண்ணிக்காணின், அவற்றுட் பொதிந்துகிடக்கும் பாக்கள் எத்தனே எத்தனே ஆயிரங்களோ? அவற்றை ஆக்கியளித்த ஆசிரியப் பெருமக்கள் எத்தனே எத்தனே நூற்றுவாோ ? தமிழனுய்ப் பிறந்த ஒவ்வொருவனும், இந்நூல்களைக் கற்றுத் தேர்தல் வேண்டுமாயினும், அவை யனேத்தையும் கற்றுத் தேர்தல் கனவினும் இயலாத காரியமாம் ; ஆயினும், அவற்றைக் கல்லாத விடுதல், கழுவாயற்றதோர் விழுமிய குற்றமாம் ; கல்வி கரையில; கற்பவர் நாள்சில” என்ப. ஆகவே, அவற்றுள் தலையாய நூல்கள் சிலவற்றையாவது அறிந்து பயன்கோடல் வேண்டும். தமிழ் நூல்களுள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியங்களாய அால்கள் எல்லாம், ஏறக்குறைய ஒருகாலத்தே தோன்றியனவே ஆயினும், அவற்றுள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகையாகிய அால்களேயே, அறிஞர்கள், சங்க இலக்கியம் எனப் பெய ாளித்துப் போற்றுவர். . - பத்துப்பாட்டு, எட்டுத்தொகையாகிய அந்நூல்களுள் அடங்கிய பழந்தமிழ்ப் பாக்கள், பண்டைத் தமிழகக் காட்சியினைப் பளிங்கெனக் காட்டும் படக்காட்சியாகும் :