பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடத்தாமக் கண்ணியார் 97

உடனே, அவர் உளத்தே, இவ்விளைஞனே, ஈம் முரண் தீர்த்து முறைவழங்க வல்லான்’ எனும் ஐயம் எழுந்தது; அதை அவர் வாய்ச்சொல் வெளியிடவும் செய்து விட்டது; அவர் கருத்தைக் குறிப்பான் அறிந்து கொண்டான் கரிகா லன்; உடனே அண்மையில் இருந்ததோர் அறையுட் சென்று புகுத்துவிட்டான்; சிறிது நாழிகை கழித்து கரை, திரை தோன்றிய முதியான் போல் உருவுதாங்கி வெளிப் போந்து அரசவை அமர்ந்தான்்; அங்கிலேயில் அவனைக் கண்ட அம் முதியோர் இருவரும், முன்னர் யாம் கண்ட அவ் விளையோன் அரசனல்லன் ; இம் முதியோனே அரச குவன் ; நம் முரண்போக்கும் மூதறிவுடையனே இவன் என்று எண்ணித் தம் வழக்கினே அவனுக்கு விளங்க' உரைத்தனர்; கரிகாலனும், அவர் கூறியனவற்றை ஆச எண்ணி, அவரும், ஆண்டுள்ளார் எவரும் வியக்குமாறு முறை யளித்தான்் ; அவன் கூறிய முறை கண்டு, மகிழ்ந்த அம் முதியோர், அவனே வாழ்த்தி வணங்கி கின்ற அப் போதே, தன் முதிய வேடங் களத்து, உண்மை உருவொடு தோன்றலாயினன்; அங் கிலேயில் அவனேக் கண்ட முதி யோர், அவன் பெருமையும், தம் சிறுமையும் உணர்ந்து வியந்து பாராட்டினர்; இதுவே அக்கதை. இக் கதையை உறுதி செய்யவல்ல சான்றுகளாகக் கீழ்வரும் செய்யுட் களைக் கொள்வர் அக் கதை கூறுவார் :

'உரை முடிவு காணுன் இளமையோன் என்ற நாைமுது மக்கள் உவப்ப-நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்் சோழன் : குலவிச்சை கல்லாமல் பாகம் படும்.” - (பழமொழி : உக) "இளமை காணி முதுமை எய்தி

உரை முடிவு காட்டிய உாவோன்.” -

(மணி. பளிக்கறை : கoஎ-அ) வளவன் வள்ளன்மையினே வாயா வாழ்த்தும் புலவர், அவன், பாணர் முதலாம் இரவலர்க்கு அளிக்கும், உணவு, உடை ஆகியவற்றின் வகைகளையும், வனப்பையும் விளங்கக் கூறுவதற்குமுன், அவன் அவரை வரவேற்கும்

பே.-7 -