பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடத்தாமக் கண்ணியார் 191 -

வேண்டும். அவர்கள் அவ்வாறு வாழ முன்வரும் அந்நாளே எண்ணி ஏங்கினர் புலவர் ; அக்கில்ே தம் வாழ்நாளில் வாய்க்கப்பெருதாயினும், அம்மூவரும் ஒன்றுகூடி வாழ்வ தால் உலகத்தார்க்கு உண்டாம் பேரின்ப வாழ்வை உவமை யில் அமைத்துக்கண்டு அகமகிழ எண்ணிஞர் புலவர். பொருகன் பாடும் மிடற்றுப் பாடலுக்கேற்ப, எழும் அவன் யாழ்ஒலி தரும் இன்பம், அரசர் மூவரும், அன்புடை யுளத் தாராய், அரசவை வீற்றிருப்பதால் உண்டாம் பேரின்பம் போன்றதாம் என உவமைகூறி உளமகிழ்ந்தார்; என்னே அவர் உள்ளம் ! -

' பீடுகெழு திருவின் பெரும்பெயர் நோன்தாள்

முரசு முழங்கு தான்ே மூலரும் கூடி அாசவை இருந்த தோற்றம் போலப் பாடல்பற்றிய பயனுடை எழாஅல்.’

(பொருநர் இக - சு)

உலகில் நிகழும் ஒவ்வொரு செயலும் முற்பிறப்பின் வினேயின் விளைவாம் ; முன்னேப் பிறப்பில் கல்வினை செய் தார், இப்பிறவியில் கன்மை யடைவர்; இம்மையில் தவம் செய்தார், மறுமையில் பேரின்பம் பெறுதலோடு இப்பிறவி யிலேயே, தவம்செய்த உடலோடு கூடியிருக்கே, அத் தவத்தாலாம் பயனப் பெறுதலும் உண்டு என்ற கொள்கை யுடையவர் நம் புலவர்; வறுமையால் வாடிவரும் பொருநன் ஒருவன், கரிகாலனேன் கண்டு பெரும் பொருள் பெற்: மீளும் மற்றொரு பொருகனே வழியில் கண்ட்து, அவன் முற்பிறவியில் செய்த தவத்தின் பயனும் என்றும், கரிகாலசீனக் கண்டு பாராட்டிய அவ்வளவிலேயே பொருகன் பெரும் பொருள் பெறுதல், தவம் செய்த பெரியோர், அத்தவம் செய்த தம் உடலோடு கூடியிருந்தே அத்தவத்தா லாம் பயன்பெற்றுப் பேரின்பம் பெறுதல்போலாம் என்றும் அவர் கூறும் கற்ருன் அவர் உள்ளத்துணர்வு வெளிப்போதால் காண்க :

" அறியாமையின் நெறிதிரிக் து ஒாாஅது

ஆற்றெதிர்ப் படுதலும் கோற்றதன் பயனே. (இ.அ.க)