பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடத்தாமக் கண்ணியார் 103.

கிற்கின்றன ; பொருநன் யாழின் பல்வேறு உறுப்புக் களுக்கும், விறலியின் பல்வேறு உறுப்புக்களுக்கும் அவர் காட்டும் பல்வேறு உவமைகள் அழகுற அமைக் துள்ளன ; அவையனைத்தையும் ஈண்டு எடுத்துக்காட்டின் எடு விரியுமாதலின், அதைச் செய்யாது, அவர் காட்டும் வேறு சில உவமைகள் சிலவற்றைக் காட்டி இக்கட்டுரையினை முடிக்கின்றேன்.

கரிகாலன் பிறந்தபோதே அரசாளும் உரிமை உடைய ஞயிஞன் ஆகவே, அவன் தவழ்ந்து விளையாடத் தொடங் கிய அக்காலத்திலேயே ஆட்சிப் பொறுப்பினைத் தாங்கி கின்ருன் ; இதை விளக்கவந்த புலவர், தன் ஒளியால் உலகை விளக்கமுறச் செய்யவரும் ஞாயிறு, இளஞாயிருகிய அக்காலத்திலேயே, தான்் தோன்றும் இடமாகிய கடலி டையே தன் பொன்னிறக் கதிர்களைப் பாப்பி ஆண்டு ஒளிசெய்து எழுதலே உவமை காட்டியுள்ளார் :

' பவ்வ மீயிசைப் பகற்கதிர் பரப்பி

செவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்குப் பிறந்து தவழ் கற்றதன் தொட்டுச் சிறந்தநன் நாடுசெகின் கொண்டு நாடொறும் வளர்ப்ப.”

(க.க.இ.அ)

கரிகாலன் அரியனே அமர்ந்து பெற்ற முதல் வெற்றி, அவன் வெண்ணி நகரில் பெற்ற வெற்றியாம்; வெண்ணிப் போரில், கரிகாலன், சோன், பாண்டியன் ஆய பேரரசர் இருவரையும், அவர்க்குத் துணையாக வந்த சிற்றரசர் பதிளுெருவரையும் வென்று வீறுகொண்டான் ; கனிஇளைய ய கரிகாலன், தான்் மேற்கொண்ட கன்னிப்போரி லேயே அத்துணேப் பெரிய வெற்றிபெற்ற பெருஞ்செயல் கண்டு வியந்த புலவர், கரிகாலன் செயல், பாலுண்ணலே மறந்தறியாத புலிக்குட்டி யொன்று, கூற்றுவன்போல் ஆற்றல் மேற்கொண்டு சென்ற முதல் வேட்டையிலேயே, களிற்று யானையினேக் கொன்ற அருஞ்செயல்போலும் எனக் கூறிப் பாராட்டி மகிழ்கிருர் :