பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 3

கானம், தாமல், திருப்போர்ப்புறம், துளுநாடு, துறையூர், தேமுதுகுன்றம், தேனூர், தொண்டி, நாஞ்சில், நாலூர், நான்மாட்க்கூடல், கி ய ம ம், நீர்ே, நெய்தலங்கானல் நெல்லினுளர், நேரிவாயில், பருவூர், பல்குன்றக்கோட்டம், பவத்திரி, பாடலி, பாமுளுர், பாரம், பிசிர், பிடஆர், புகார், புனல்நீர்நாடு, பூழி, பெருங்குன்றார், பொறையாறு, போஒர், மதுரை, மருங்கூர்ப்பட்டினம், மழபுலம், மாங்காடு, மாங்குடி, மாடலூர், மார்கை, மாவிலங்கை, மிழலை, முக்காவனுடு, முசிறி, முத்துாறு, முள்ளுர், மோகூர், மோசி, வஞ்சி, வல்லம், வலாஅர், வாகைப்பறந்தலை, வாட்டாறு, வியலூர், வி ள ங் கி ல், வீரை முன்துறை, வெண்ணி, வெளியம், வெள்ளுர், வேம்பற்றார், வேம்பி, வேலூர், வேளுர், முதலியனவாம். அயிரி, ஆன்பொருனை, கங்கை, காரி, காவிரி, சிலம்பாறு, சேயாறு, சோணை, பஃறுளி, பெண்ணேயாறு, பெரியாறு, வையை முதலிய ஆறுகளையும், அதலைக்குன்றம், அயிரைநெடுவரை, இமயக் குன்று, ஏழில்நெடுவரை, கவிரம், குடமலை, குதிாைமலை, குமரிக்கோடு, குருகொடுபெயர் பெற்றமலை, கொல்லி, கோடை, நவிரம், நன்ரு, நேரி, பாங்குன்று, பறம்பு, பொதியில், மாலிருங்குன்றம், முதிரம், வேங்கடம் முதலாய மலைகளையும் நமக்கு அறியக் காட்டுகின்றன. அப்பாக்கள். அதியர், அருவாளர், ஆரியர், ஆவியர், ஒளியர், ஒவியர், கொங்கர், கோசர், தொண்டையர், சந்தர், பரதவர், பூழியர், பொதுவர், மழவர், மோரியர், யவனர், வடுகர், வேளிர் முதலாம் பலவேறு இனத்தார்தம் வரலாறுகளையும் விளங்க உரைக்கின்றனர் அப்புலவர்கள்.

இவ்வளவு வரலாறுகள் விளங்கத் துணைபுரியும் பத்துப்பாட்டு எட்டுத்தொகையாகிய நூல்களுள் அடங்கிய பாக்கள், இரண்டாயிரத்து முந்நூற்று அறுபத்தொன் பதாம்; இவ்வளவு பாக்களையும் பாடிய புலவர்கள் எண்ணிக்கை, நானூற்று அறுபத்து எட்டு; இவருள், அக்கால அரசர்தம் வரலாற்றினே விரித்துரைத்தார், நூற்று காற்பத்து நால்வரே. -