பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉ. மையோடக் கோவனுர்

பரிபாடல் பாடிய புலவர் பெருமக்களுள் மையோடக் கோவனுரும் ஒருவர் ; புனல் விளையாட்டிற்குத் துணை புரியும் ஒடத்தைப் புனேந்து கூறியதுபற்றி இப்பெயர் பெற்ருர் போலும் எனக் கருதுவாரும் உளர். தலைமகன், தலைமகளோடு புனலாடி மகிழ்ந்தான்் எனக் கேட்டு இன் புற்ற செவிலித்தாய், தோழியை விேர் ஆடிய புனலணி இன்பங்களை எடுத்துக் கூறுக என்ருட்கு, அப்புனலணி இன்பமும், தலைமகன் காதற் சிறப்பும் கூறி என்றும் இவ் வின்பமே நிறையுமாக என்று வாழ்த்தி வேண்டினுள் எனத் துறையமைய வந்த அப்பரிபாடற் பாட்டு, வையைப்

பெருக்கினே வனப்புத் தோன்ற விரித்துக் கூறுகிறது.

புலவர், மையோடக் கோவனுர், வையையின் வெள் ளப் பெருக்கினேயும், அவ்வையைக்குரிய பாண்டி வேந்தர் கம் படையின் சிறப்பினேயும் பல்லாற்ருனும் பாராட்டிக் கூறியிருத்தலின், இவர் பாண்டி காட்டவர், அப்பாண்டிய அரசர்பால் பேரீடுபாடு உடையவர் என்பன புலனும்.

வையையாற்று வெள்ளம், புக அரிய இடம் என எதையும் ஒதுக்காமல் எங்கும் பார்து பாய்ந்தோடும் காட்சி, பாண்டியர் பெரும்படை, தம்மால் கொள்ளற் கரிய நாடு இது என எங்காட்டையும் வரைந்து ஒதுக்காது, கொள்ளக் கருதிய நாடுகள் அனேத்தினும் உட்புக்குப் பாழ் செய்யும் நிகழ்ச்சியோடு ஒத்துளது என்றும், வையைப் புனல் தன்னகத்தே புகுந்து ஆடும் ஆடவர், மகளிர் ஆய இருவரும் அணிந்திருக்கும் தலைமாலை, கைவளை, விரல் மோதிரம், கலைக்கோலம், இடை ஆடை, இருவட மணிமேகலை, எண் வடக் காஞ்சி, வாகு வலையம் ஆய ஆடை, அணி அனைத்தையும் கவர்ந்தோடும் காட்சி, பகைவர் நாட்டுட் புக்குப் பாழ்செய்யும் பாண்டியர் பெரும் படை அந்நாட்டுச் செல்வம் எல்லாவற்றையும் கொள்ளை கொண்டு வரும் நிகழ்ச்சியோடு ஒக்கும் என்றும், வையைக்