பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங். மோதாசனுர்

இவர் பெயரால், குறுந்தொகைக்கண் ஒரு செய்யுள் இடம் பெற்றுளது என்பதல்லது, இவர் வரலாறு குறித்து வேறு எதுவும் அறிதற்கில்லை. -

ஒரு தலைவனும், ஒரு தலைவியும் தாம் இருவரும் மணத்தற்குத் தம் ஊர் வாழ்க்கை இடையூருதல் அறிந்து, அயலூர் சென்று மணந்து வாழத்துணிந்து கம் ஊரை விட்டுச் செல்லலாயினர்; அவர்களே இடைவழியில் கண் டார் சிலர் ; அவர்கள், அவர்களே முன்னரே அறிந்திருந் தனர்; இளமையில், ஐம்பாலாகப் பின்னிவிடப்பட்டிருந்த அவள் கூந்தலை அவன் பற்றி இழுப்பன் ; அவன் தலை மயிரை அவள் கைப்பற்றி வளைத்து வலிப்பள் ; அவர் இரு வர்க்கிடையே உண்டாம் இச்சிறு பூசல்களே, இருவர் செவிலித்தாயரும் இடையிட்டுப் போக்குவர் ; அவ்வாறு அன்று பலகாலும் போர்புரிந்து வாழ்ந்த அவ்விருவரும், இரு மலர்கள் ஒருங்கே பிணைப்புண்டாற்போல், ஒருவரை ஒருவர் இன்றியமையாராயினர்; அன்று அவர்கள் மேற் கொண்ட சிறுபூசல்களை இடையிட்டுப் போக்கிய செவிலித் தாயர், இன்று அவர்கள் மணவினேக்கு இசையாாயினர் ; அவர்கள் இசையாாாகவும் இவர்கள்மனம்ஒத்து மணக்கத் துணிந்துவிட்டனர்; இளமையில் இருவர் உள்ளத்திருந்த பகையையும், இன்று இருவர்தம் பெற்ருேர்க்கிடையே கிலவும் ஒற்றுமை இன்மையையும் ஒருங்கே போக்கி, இரு வரும் உளம் கலந்து உறவாடத் துணை புரிந்தது ஊழ்வினை; இவ்வாறு உறுதுணே புரிந்த ஊழ்வினே வாழ்க பல்லாண்டு என அவ்வூழ்வினேயை வாழ்த்தினர். வழிச்செல்வார் வாழ்த்திய வாழ்த்துரையினே வகுத்துக்காட்டுகிறது. புலவர் மோதாசனர் பாடிய அப்பாட்டு,

இதில் அடுத்தடுத்த வீடுகளில் வாழும் இளைஞர்கள், காரணம் இன்றியே பலகாலும் ஒருவரோடொருவர் போர் புரிவதையும், அப்போரை அவர்தம் பெற்ருேர் இடை