பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. வருமுலையாரித்தி

- இவர் பெண்பாற் புலவராவர் எனக்கொள்வர், குறுங் தொகைப் பதிப்பாசிரியர். அவ்வாறு கோடற்குரிய காரணம் எதையும் அவர் காட்டினரல்லர்; வருமுலையாரித்தி என்ற தொடர் அமையப் பாடிய காரணத்தால் பெற்ற பெயராதலும் கூடும் ஆதலின், இவரைப் பெண்பாலார் எனத் துணிந்து கொள்வதற்கில்லை.

ஆண்மகன் ஒருவன், தன் உள்ளம் விரும்பிய பெண் ஒருத்தியைப் பெற எண்ணியக்கால், தன் ஆண்மையால் அறவழியின் நீங்கிப் பெற முயலாது, தன் கருத்தினை அவள் ஏற்று இசையுமாறு பலகாலும் அவள்பால் சென்றும், பணிந்த மொழிபல கூறியும் தான்் எண்ணியதை முடித்துக் கோடல் வேண்டும்; ஆண்மகன் இத்தகைய பண்பட்ட உள்ளமுடையணுதல் வேண்டும் என்ற தம் கருத்தினைப் புலவர் வருமுலையாரித்தியார் ந்ன்கு எடுத்துக்காட்டி யுள்ளார்.

ஒருநாள் வாாலன் ; இருநாள் வாாலன் ;

பன்னுள் வந்து பணிமொழி பயிற்றி, என் நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை.” (குறுங் : க.எசு)"

உள்ளம் கலங்கிய கலக்கத்திற்குப், பெருமழை பிறர் காட்டில் பெய்ததாக, ஆங்கிருந்து பெருகி ஓடிவரும் வெள்ளத்தின் கலங்கிய நிலைமையினே உவமை கூறியது, உள்ளக்கலக்கத்தின் கொடுமையினை விளக்கிகிற்றல் காண்க.

' வேறுபுலன் கன்னட்டுப் பெய்த

ஏறுடை மழையிற் கலிழும் என் நெஞ்சே.” (குறுங் : க.எசு)