பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகா. வன்பரனர்

சங்க காலப் புலவர்களுள், பாணர் என்ற பெயருடை யார் மூவர். அவர்கள், ஒருவரின் ஒருவர் வேறு அறிதற். குப் பாணர் எனவும், நெடுங்களத்துப் பாணர் எனவும், வன்பரணர் எனவும் வழங்கப்பட்டனர். பரணர், சோன் செங்குட்டுவனேப் பாடியவர் ; நெடுங்களத்துப் பாணர், நெடுங்களம் எனும் ஊரிற் பிறந்தவர் ; வன்பரணர், கண் டீரக்கோப் பெருநள்ளியையும், வல்வில் ஒரியையும் பாடி யவர். இவர் பெயர்க்கு முன்னே காணப்படும் வன் என்ற. சிறப்பு வருதற்குரிய காரணம் விளங்கவில்லை. இவர் காலப் புலவர்கள், இவராற் பாராட்டப் பெற்ருேராய அவ் விரு வரையும் பாடிய, கபிலர், கல்லாடனர், கழை தின் யானே யார், காக்கைப் பாடினியார், சச்செள்ளையார், பரணர், பாலத்தனர், பெருங் கலைச் சாத்தனர் முதலியோராவர்.

கண்டீரக் கோப் பெருநள்ளி, கடையெழு வள்ளல் களுள் ஒருவன் ; குமணனுக்கு முற்பட்டவன் ; தோட்டி என்ற மலைக்கும், அதைச் சூழஉள்ள மலைநாட்டிற்கும் உரியவன்; வில்லாற்றல் மிக்க வீரர்க்குத் தலைவன் ; கன் நாடு கோக்கி வருவார்க்கு யானையும், தேரும், பொன்னும், பொருளும் அளித்துப் போற்றுபவன் ; இவன் அளிப்பது மட்டுமன்று இவன் இல்லாக் காலத்தில், இவன் நாடு நோக்கிச் செல்வார்க்குப் பிடி யானைகள் பலவற்றை இவன் பெண்டிரும் அளிப்பர். -

ஒருநாள் நள்ளி, காட்டில் வேட்டையாடிக் கொண் டிருந்தான்் ; அக்காலை, அவ் வழியே வந்த வன்பரணர், வறுமையாலும், வழிநடை வருத்தத்தாலும் மெலிந்து, மரமொன்றின் கீழ் இருந்து இளைப்பாறினர்; இருந்தாரை, அங் கிலேயிற் கண்ட நள்ளி, தான்் வேட்டையாடிக் கொணர்ந்த விலங்கின் தசையைக் கடைக்கோலால் உண்டாக்கிய தீயில் தான்ே சுட்டு, அவர்க்கும், அவரொடு வந்தார்க்கும் வழங்கின்ை ; ஆாப் பசித்த அவர்கள், அத.