பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பேயனர்

தீா உண்டபின்னர், மீண்டும் வழியே செல்லலாயினர்; அப்போது, நள்ளி, அவர்களை அணுகி, 'ஐய காட்டில் வாழ்கின்றேன் ; கையில் ஒன்று மிலேன்,' என்று கூறிக் கழுத்தில் அணிந்திருந்த ஆரத்தையும், கையிற்கிடந்த கடகத்தையும் அளித்து மகிழ்ந்தான்் ; அவன் இன்னன் என்பதை அறியாத வன்பரணர், "வேண்டாதபோதே வலியவந்து விருந்தேற்றுப் போற்றும் நீ யார்?' என்று வினவ, அதற்கு விடையளியாதே வெளியேறினன் ; பின்னர் அவ் வழி வந்தோரால், அவன் நள்ளி என்ப தறிந்த வன்பரணர், உள்ளமும், உரையும் ஒருவழி கிற்க, உயர்ந்த பாக்கள் பல பாடிப் பாராட்டினர். காட்டகத்தே கண்ட காட்சி அமைய வந்த பாட்டு அவற்றுள் ஒன்று.

'கூதிர்ப் பருந்தின் இருஞ்சிற கன்ன

பாறிய சிதாரேன் பலவுமுதல் பொருந்தித் தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்தனன் உயங்குபடர் வருத்தமும் உலேவும் நோக்கி மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால் வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச் செல்வத் தோன்றல் ஒர்வல்வில் வேட்டுவன், தொழுதனென் எழுவேன் கைகுவித்து இரீஇ, இழுதின் அன்ன வானினக் கொழுங் குறை கானதர் மயங்கிய இளையர், வல்லே தாம் வந்து எய்தா அளவை, ஒய்யெனத் கான்ஞெலி தீயின் விரைவணன் சுட்டு, ரின் இரும்பே ரொக்கலொடு தின்மெனத் தருதலின் அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி, நன்மான் அளிய நறுந்தண் சாால் கன்மிசை அருவி, தண்ணெனப் பருகி, விடுத்தல் தொடங்கி னேளுக, வல்லே, பெறுதற் கரிய வீறு சால் நன்கலம் பிறிதொன் றில்லை : காட்டு நாட்டேம் என மார்பிற் பூண்ட வயங்கு காழ் ஆரம், மடைசெறி முன்கைக் கடகமோடு ஈத்தனன் :