பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பேயனர்

- இவ்வாறு பெருநிதிப் புதையலாய் விளங்கும் அப் பாக்களை அறிந்து பயன் கோடற்குமுன், அப்பாக்களைப் பாடிய புலவர்கள்தம் வரலாறுகளே அறிந்துகோடல் அமைவுடைத்தாகும். வரலாறு விளங்கத் துணைபுரிந்த புலவர்கள், தம் வரலாறு உரைவழி வகுத்தாால்லர்; அவர் வரலாற்றினே அறியப் பெருந்துணையாய் சிற்பன, அவர்தம் பெயரும், அவர் பாடிய பாக்களுள் சிலவுமேயாம். அப் புலவர்க்கமைந்த பெயர்களே நோக்கின், இயற்பெயர் இதுவென உணர்த்தி கின்றன. சில ; தந்தை பெயர் தெரிய வந்தன. சில; தந்தை பெயரொடு தம்பெயரும் உணர வன்தன. சில ; உறுப்பான் அமைந்தன. சில ஊாான்வந்தன சில ; ஊரும், பெயரும் உணரவந்தனவும், ஊரும் தொழி தும் உணரவந்தனவும், ஊரும்பெயரும், உற்ற தொழிலும் ஒருங்குனா வந்தனவும் சில ; அவர் பாட்டிடை விளங்கும் அழகிய உவமையும், அரிய தொடருமே பெயராய் அமைந்தன. சில; ஆதன், ஆங்தை, எயினன், கடுவன், கண்ணன், ரேன், குமரன், கொற்றன், தேவன், நாகன், பூதன் போலும் பெயர்களைப் பெற்றுவந்தன. சில; ஆக, இவ்வாறு, அவர் வரலாற்றின் ஒரு பகுதி உணரத் துணை புரிவனவாதல் விளங்கும். இப்புலவர்கள்தம் வரலாறுகளை நோக்கியக்கால், அவரிடையே, அரசராய் வாழ்ந்தார் சிலரும், உழவு, நெசவு முதலாம் பல்தொழில் புரிந்து பயன்தருவார் சிலரும், வணிகராய் வாழ்ந்து வளங்கொழித்

தார் சிலரும் விளங்கக் காணலாம். -

இவ்வாறு வாழ்ந்து வழிகாட்டிகளாய் விளங்கிய புலவர் களின் வரலாறுகளே, அவர் பெயர்த்துணையும் பாக்கள் துணையும்கொண்டு அறிவிக்க முன்வந்து,தனிநூலாக வெளி யிடத்தக்க விரிந்த வரலாறு உடையாகிய, கபிலர், பரணர், நக்கீசர், ஒளவையார் ஆகியோர் வரலாறுகளைத் தனித் தனியே வெளியிட்டு, ஏனேயோர் வரலாறுகளையும், பெண் பாற்புலவர்கள்” “உவமையாற் பெயர் பெற்ருேர், ' காவலபாவலர்கள், கிழார்ப் பெயர் பெற்ருேர், வணிக ரிற்புலவர்கள்,” மாநகர்ப்புலவர்கள்-1, 2, 3, உறுப்