பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பேயனர்

கேட்டினும் உண்டு ஒர் உறுதி என்ப; தலைவன் ஒருவன் பொருள் கருதிப் பிரிந்தறியாத் தன் மனேவியைப் பிரிந்து சென்றிருந்தான்்; அப்பிரிவால் இருவருமே வருந்தினர்; ஆயினும், தலைவன் மீண்டுவரும் பருவம் வத்துற்றது என் பதறிந்த அவன் மனைவி, அவன் பிரிவை எண்ணி அழுவதை மறந்தாள்; மீண்டுவரும் அவனே மகிழ்ந்து வரவேற்க விரும் பினுள்; அவன் விரும்பி உண்ணும் உணவு பல ஆக்க எண்ணினுள்; அதை ஏவல் மகளிர் செய்யின், அவன் விரும் பும் சுவை அறிந்து ஆக்கார் என்று கருதினுள்; உடனே அன்று காறும், அட்டிற்சாலை புகுந்தறியா அவள், ஆங்குச் சென்று, கன் உடல் வருத்தமும் பேணுத, வகைவகை யான உணவுகளே ஆக்கி முடித்தாள்; அழகிய அணிபல அணிந்து கொண்டாள்; எதிர்ப்பட்டார் எவரிடத்தும் இன்னுரை வழங்கலாயினன்; மனே விபால் உண்டாய இம் மாற்றத்தை அறிந்தார் வாய்க் கேட்ட அவன், அவள்பால் அத்தகையை மாண்பு வரச்செய்த தன் பிரிவை வாழ்த்தி னுன்; அவள் பால் அன்று காணலாம் அம்மாண்புகள் என்றும் கிலைத்து கிற்க விரும்பினுன். பழந்தமிழ் மகளிர் பால் தாம் கண்ட இம் மாண்புகளைப் புலவர் வன்பரணர் .பாட்டொன்றில் வைத்துப் பாராட்டியுள்ளார்.

"முற்றையும் உடைய மோ?......... -

விருந்தயர் விருப்பினள் வருந்தும் - திருக்திழை அரிவைத் தேமொழி கிலேயே. (நற்: க.எச)