பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.க. வெண்பூதனுர்

தேவன், நாகன், பூதன் என்பன சங்ககாலத் தமிழ் மக்கள் தங்கள் மக்கட்கு இட்டு வழங்கிய தெய்வப் பெயர் களாம். வெண்பூதனர் பாடிய பாட்டொன்ற குறுங் தொகைக்கண் வந்துளது தம் முயற்சியால் வந்த பொருளைத் தாம் உண்ணுங்கால் உண்டாம் உயரிய இன்பத் தினை உள்ளவாறு உணர்ந்தவர் புலவர்,

இன்பங்களுள், ஈத்து உவக்கும் இன்பமே இறப்ப உயர்ந்ததாம் ; அவ்வின்பத்தினும், முன்ஞேர் ஈட்டிய பொருளே, தான்் வறிதே இருந்துண்ணல் இன்றித் தான்ே. அரிதின் முயன்று முடித்த பெரும் பொருளைப் பிறர்க்கும் ஈத்து, தான்ும் உண்பனுயின் அங்கிலையில் உண்டாம் இன்பத்திற்கு, சுடும், எடுப்பும் எங்கும் இல்லை என்ப ; கி. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம் புலனும் ஒண்தொடி கண்ணேஉள' எனப் பாராட்டப் பெற்றுப், பேரின்ப கிலைக்களஞய் விளங்குபவளாய பெண் ளுெருத்தி தரும் இன்புத்திற்குத் தான்் தேடிப்பெற்ற பொருளைத் தன் மனநோக்கி வருவார்க்கு மகிழ்ந்து அளித்து, அருந்தி வாழும் வாழ்வால் பெரும் பேரின் பத் தையே உவமை காட்டுவர் ஆசிரியர் வள்ளுவனர் எனின், அவ்வின் பத்தின் சிறப்பினே என்னெனப் புகழ்வது ! * தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்ருல், அம்மா ! அரிவை முயக்கு.” தன் முயற்சியால் தந்த பொருளே உண்ணுவழி உண்டாம் இன்ப உயர்வினை, தெண்ணிர் அடுபுற்கை ஆயினும் தாள் தந்தது உண்ணலின் ஊங்கு இனியது இல்” என்ற குறளாலும் போற்றியுள்ளார். இவ் வுண்மை உணர்ந்த புலவர், வெண்பூதனர், அவ்வின் பத் இனப்பலாக்கனியின் பெருஞ்சுவை தரும் பேரின் பத்திற்கு Koo.o is) காட்டியுள்ளார். -

தம்மில் தமது உண்டன்ன, சினைதொறும் தீம்பழம் தாங்கும் பலவு.”