பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பேயனர்

தான்் விரும்பிய தலைமகனுக்கே, தன்னை மணம் செய்து தர இசைத்து, அவ்விசைவினேப் பெற்ற அவன், வரைந்துகொள்ளும் முறையோடு வருவன் என்ற செய்தி யையும் வெளியிட்டாள் தாய் என்பதறிந்த தலைவியும், அவள் தோழியும், அச்செய்தி கேட்ட பெருமகிழ்ச்சியால், " அவ்வாறு கூறிய நம் அன்னே, அமார்க்கும் கிடைத்தற்கு அரிய அமிழ்த உணவை ஆாப்பெறுவாளாக l பெரும்புகழ் நிறைந்த அப்பேருலகே அவள் இருந்து வாழும் உலகாகுக! என வாழ்த்தினர் எனக் கூறித் தமக்கு நன்மை புரிந்தார் கல்வாழ்வு வாழவிரும்பும் நல்லுள்ளமுடையர் தமிழர் என்ற செய்தியையும், அவர்கள் தேவர்.உலக வாழ்வும், அத்தேவர் தம் அமிழ்தவுணவும் உயர்ந்த பண்பாடுடையன என்ற எண்ணமுடையராவர் என்ற செய்தியையும் அறிவித்துள் ளார் புலவர் :

“அரும்பெறல் அமிழ்தம் ஆர்பக மாகப்

பெரும்பெயர் உலகம் பெlஇயரோ அன்னே :

தம்மில் தமது உண்டன்ன சினைதொறும்

தீம்பழம் தாங்கும் பலவின்

ஒங்குமலே நாடனே வரும் என்ருேளே.” (குறுங்: அக.)