பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந.கா. வெள்ளை மாளர்

வெள்ளே மாளர் என்ற இப் பெயரன்றி, இவர் வரலாறு குறித்து வேறு குறிப்பு ஒன்றும் கிடைத்திலது ; இவர் வரலாறு குறித்தோ, அன்றி இப் பெயர் குறித்தோ ஒன்றும் விளங்காமையால், இவர் பெயர் வெள்ளை மாள ஞர் எனவும் கொள்ளக் கிடக்கின்றது எனவும், இவர் பெயர் வெள்ளைமாளர் என்பதன்று, வெள்ளை மாறஞர் என்பதாம் எனவும் பலரும் பலவாறு கூறுவாராயினர்.

போர் மேற்சென்று விழுப்புண் பெற்று வீரர் பலரும் விடு கிரும்பினராக, ஒரு வீரன்மட்டும், பகைவரைப் பாழ் செய்தன்றி மீளேன் எனக் கூறிப் பெரும்போர் செய்தமை யால் அவன் தேர், காலங்தாழ்த்து வந்தது எனக் கூறிப் பழங்கால மறக்குடி மாண்பினே வாழ்த்தியுள்ளார் புலவர். வீரர் விழுப்புண் பெற்ருமாக, புண்பெற்ருரைப் பேய் முதலாயின. அண்டி அச்சுறுத்தாமை கருதிய, அவ்

வி

சேர்க்கு வாழ்க்கைத் துணையென வந்த மாண்புடை மனேவி யர், வேப்பிலை கொணர்ந்து வீட்டு இறப்பில் செருகுவர் ; காஞ்சிப் பண் பாடுவர் ; வெண்சிறு கடுகு புகைப்பர்; அவர்தம் இச் செயல்களால் மறவர்சேரி ஆரவாரம் கிறைந்து தோன்றும் என்று கூறிப் பழந்தமிழர் தம் போர்ப் பண்பினைப் போற்றிப் புகழ்ந்துள்ளமை நோக்குக.

'வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும், செய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும், எல்லா மனையும் கல்லென் றவ்வே , வேந்து உடன்று எறிவான் கொல்லோ நெடிது வந்தன்றால் நெர்ெதகை தோே.’ (புறம்: உகசு)