பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாசான் 143

வெளிப்போந்து விட்டான்; அவன் வெளிப் போத்த சின் னோத்திற் கெல்லாம், உள்ளிருக்கும் அரசனும், அடைத் திருந்த சீப்பை நீக்கி வாயிலைத் திறத்துவிட்டான் ; புறத் திருக்கும் வேந்தனும், கோட்டையைத் தாக்கச் சார்த்தி யிருந்த ஏனைகளை ஒழித்துவிட்டு ஊர் திரும்பலாயினன். இவ்வாறு போர் ஒழிந்தமைக்கு அந்தணனே காரணம், அவன் கூறிய அறவுரைகளே காரணம் என அறிந்தார்; அவ்வந்தணனைப் பாராட்டினர் : அப்பாராட்டுரையினைப் பாட்டாக்கித் தந்துள்ளார் புலவர்.

' வயலைக் கொடியின் வாடிய மருங்குல்

உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான் எல்லிவந்து, நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே ; அதற்கே ஏணியும், சீப்பும் மாற்றி, மாண்வினை யானையும், மணிகளைக் தனவே.:

(புறம் : க.0டு)