பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 149

மக்கள், ஆயர், வேட்டுவர் எனவும், பாணன், பறையன் எனவும், அந்தணன், அரசன் எனவும் தொழில் பற்றிப் பிரித்தழைக்கப் பட்டுள்ளனரெனினும், அப்பிரிவுணர்ச்சி, அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்தற்கு வழி செய் வினவாய கல்வி, பொருள் ஆகிய இவைகளைப் பெறு தற்குச் சிறிதும் தடையாய் விற்கவில்லை. பிரித்துணர்ந்து பாழ் செய்யும் பொல்லாங்கில்லா நல்வாழ்வு பெற்றிருந்த காரணத்தால், அந்தணர்க்கும் அரசர்க்கும் அறமுரைக்க வல்ல அறிவுசான்ற புலவர் பெருமக்கள் பலர் அப்பல்வேறு குடிகளிலும் வந்து பாரோர் போற்ற வாழ்ந்தனர்.

படிக்க ஒர் இனம்; பாடுபட ஒர் இனம் என்ற இழி நிஜ வில்பெறுவதால், ஒர் இனம் படித்துப் பாண்டு உயர, ஏனையோர் எழுத்தறிவு பெறும்வாய்ப்பும் இலாாய்ப் பாட்டாளிகளாய்ப், ப்சியும், பிணியும் உற்றுப் பாழுமவ தின்றி, எக்குடிப் பிறப்பிலும் யாவரேயாயினும் அக்குடி த்ெதார் அன்வரும் கற்றற்குரியவர் என்ற உயர்கில பெற்றுத் திகழ்ந்த காரணத்தால், பண்டைத் தமிழகத்து எல்லாக் குடிகளிலும், இறப்ப உயர்ந்த கல்வியறிவு பெற் மறுக் கவினுற் று வாழ்ந்தாரைக் காணுகின்ருேம். .

அக்கால அரசரும், செல்வரும், புலவர்கள் எக்குடிப் பிறக்கர்ாயினும், அவர்தம் குடிகொண்டு குறை காணுது, அவர்தம் அறிவறிந்து, அருகழைத்து, அவர் வேண்டுவன வெல்லாம் அகமகிழ்ந்தளித்துப் போற்றிப் பாராட்டுவா ாாயினர். -

கல்வி, வாழ்வை வளமாக்குதற்காம் செல்வந்தரும் கருவி எனக் கொண்டு கற்கும் இக்கால மக்களைப் போன்றவ. பல்லர் பழந்தமிழர் ; கருத்து விளக்கத்திற்காகவே, அவர் கள் கல்வி கற்றனர். தம்மை வாழவைக்கும் வழித்துனே, கல்வியொன்றே என்றும் கருதினால்லர் ; வாழ்வளிக்கும் வளம்பெற அவர்கள் வேறு வழிகளைக் கண்டிருந்தனர், முயற்சி திருவினே ஆக்கும் என்ற மூதறிவினாாகலின், உழவு, செவ் போன்ற கைத்தொழில்களையும், வாணிபத் துறைகளையும் மேற்கொண்டு வளம் பலபெற்று வாழ்க்