பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பேயனர்

தனர்; இவ்வாறு செல்வம் சேர்க்கும் வழிகளைச் சிறக்க வுணர்ந்திருந்த அவர்கள், செல்வமே யெல்லாம் என்ற எண்ணமுடையராய் இருந்துவிட்டாரல்லர் செல்வம், உடல்வாழத் துணைபுரிவனவற்றுள் தலையாயதேயெனினும், உயர்ந்தோர் போற்றும் உயர்வாழ்வுபெற, அதன் துணை ஒன்றே போதாது ; உயிர்க்குணங்களை வளர்த்து உயர்ந் தோாகக் கல்வியின் உறுதுணையே இன்றியமையாதது என உணர்ந்து, கல்வியை விரும்பிக் கற்றனர். அதனுல், வயிறு வளர்க்கவென்றே கற்கும் இக்கால மக்களிலும், வாழ்வு வளம்பெற வேண்டி, வரிசை பலபெற்று விளங்கக் கற்ற பண்டையோர், பல்லாற்ருனும் சிறந்த விளங்கினர். அதனல், அக்காலக் குடிதோறும், குலத்தோறும் புலவர் பல்லோர் பிறந்து பார்புகழ வாழ்ந்தனர். அக்காலத்தே வாழ்ந்த புலவர்கள் நானூற்று அறுபத்தெண்மருள், அறு தொழில் புரியும் அந்தணர் குலத்துவந்த புலவர் பலர் ; வில்லேருழவராய் வியனுலகு ஆண்டாருள், சொல் லேருழவராய்ச் செக்தமிழ் காத்தார் கணக்கற்ருர் ; வணிகர் குல மணிகளாய் வந்து வளம்பல கொழித்தாருள், பாக்கள் பல புனேந்து பண்பாடு வளர்த்தார் பல்லோர். செம் பொன் லும், நவமணியும், கரும்பொன்னும் கொண்டு, அணியும் ஆயுதமும் ஆக்கித்தரும் அருங்கொழில் உடை யாருள் உலகம் போற்றும், உயர்பெரும் புலவராய் வாழ்ந் தார் எத்தனையோ பெரிய்ார்; குயவர் குலத்தே வந்து, குன்ருப்புலமை புற்ருரும் உளர் ; உடற் பிணிபோக்கும் உயர்ந்த மருத்துவத் தொழில்பூண்டாருள்ளும், உயிர்ப் பிணிபோக்கும் உரன்மிகு புலமையுடையார் சிலர் வாழ்ந் தனர்; புலவாய்ப் பிறர்போற்றக் காம் வாழ்வதோடு, பிறரையும் அப் புலமை புடையாக்கும் பேருள் ளங் கொண்டு, ஆசிரியத் தொழில் பூண்டு வாழ்ந்தார் பலர். சுருங்கக் கூறின், பழந்தமிழ்க் குடிகளுள்ளே, புலவரைப் பெற்றுப் புகழ்பெருக் குடியே இல்லை எனலாம்.

இவ்வாறு வாழ்ந்த அப் புலவர் நானூற்று அறுபத், தெண்மரும், பாடல் புனேவது, பரிசில்பெற்றுண்பது