பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பேயனர்

வாழவேண்டும்; பழியின் நீங்கிய பண்புடையாதல் வேண்டும் என்ற பேரெண்ணம் உடையராயினர்; அதனல் அரசர்கள் தவறு செய்வர், செய்கின்றனர் என்பதை அறிந்த அக்கணமே, அவர்கள்பால் சென்று, அவர் அறிவு திருத்தும் அறவுரைகளை அஞ்சாது எடுத்தக்கூறி நல்வழிப் படுத்தியுள்ளனர்; புலவர்கட்கு வரையாது வழங்கும் வள்ளியோனுய் வாழ்ந்த வையாவிக்கோப் பெரும்பேகன் பால், பரத்தையர் ஒழுக்கம் உண்மை கண்டு உளம் தான்ிய புலவர்கள், கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன் மார்கிழார் முதலியோர், அவன், அவளோடு வாழும் கல்லூர் சென்று, நல்லுரை புகன்று, அவனே நல்லவனுக்கி கணிமிக மகிழ்ந்தனர்.

உலகுபுரக்கும் உயர்வுடையதாகிய சிறப்புமிக்க உழ வுத்தொழிற்கு உறுதுணேயாக, ர்ேகிலே யமைத்தல்போலும் செயல்களைச் செய்துதாாது, அவ்வுழவுத்தொழில் புரிவா ரிடமிருந்து கிலத்திறைகளே மட்டும் தள்ளாது தண்டும் இயல்பினரைத் தன் அரசியல் அலுவலராக மேற்கொண் டமையால், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்பால் உண்டாய பெரும்பழியை, அவனுக்கு அவன் நாட்டு உழவர் அடையும் அல்லல்களை எடுத்துக்காட்டி, மழை யின்மையாலோ, மன்னன் தன் கடமையிற் றவறுவதாலோ உண்டாம் நிலவரிக் கடன்களைத் கண்டாமல் விடுவதோடு, அவ்வுழவுத் தொழிற்கு உறுதுணையாக நீர்நிலை பல ஆக்கித் தருதலும் வேண்டும் என்று அறிவுரை கூறித் திருத்தி அரசியல் நெறிவாழத் துணைபுரிந்தார் புலவர் வெள்ளைக்குடி நாகனர். பாண்டியன் அறிவுடை நம்பியின் அரசியல் அலுவலர், தம் நாட்டு மக்களிடத்தே வரி தண்டுங்கால் அறநெறிமேற் கொள்ளாது, தம் அறிவுநெறி மேற் கொண்டு, முறையின்றி, வருத்தி வாங்குவது கண்ட புலவர் பிசிராந்தையார், அறிவுடை நம்பிபால் சென்று, முறை யின்றி வரி வாங்கின், அவன் நாடேயன்று அவனும் அழி வும்.வன் என்பதைத் தெளிய எடுத்தோதி, அவனே அழிவுப் பாதையினின்றும் அகற்றித் துணைபுரிந்தார்.