பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

16 பேயனர்

பண்டைத் தமிழகத்தில் வழியகத்தே அமைந்த ஊர்கள், பகைவர் படைகளாலும், ஆறலை கள்வர்களாலும் பலகாலும் தாக்குறுவதால் வறுமையுற்று அவ்விடங் களில் புல்வேய்ந்த குடிசைகளே காணப்படுவதையும் அவர்கள் வீட்டின் முன்பக்கத்தே தொங்கும் தயிர் கடைந்துவிட்ட மத்தினே ஆண்டுக் கட்டப்பெற்றுள்ள கன் று நக்கிருக்கிச் சுவைப்பதையும், வறுமையுற்ற காலத் திலும் வந்து தங்குவார்க்கு வாழ்வளித்து அனுப்புவதையும் ஆங்கு வாழும் மக்கள் விடியற்காலத்தே, கோழி முதற் குரல் எழுப்பியவுடனே எழுந்து வினேமேற் செல்வதையும் புலவர் பார்த்துப் பழகியவர் ஆதலின், அவற்றின் இயல்பு குன்ருவாறு எடுத்துக்காட்டியுள்ளார் : - "தீர்தயிர் கடைந்த திாள்கால் மத்தம்

கன்றுவாய் சுவைப்ப முன்றில் தாங்கும் படலைப் பக்தர்ப் புல்வேய் குமாம்பை நல்கூர் சீறுர் எல்லித் தங்கிக் குடுமி நெற்றி நெடுமாச் சேவல் தலைக்குரல் விடியல் போகி.” (அகம்: அஎ) காடுகளில், ஆறலைத்து வாழும் மறவர்கள், அக்காட்டி னகத்தே கற்களால் அரண் அமைத்து வாழ்வர் ; ஆண்டு அவர் எழுப்பும் பறை ஒலி, அவ்வழிச் செல்வார்க்கு அச்சத்தை விளக்கும் என அவர் கூறும் காட்டாண் அமைப்பும், நாட்டில் செல்வர் தம் மாளிகைகளில் விடியும் வரை விளக்கொளி விளங்கும் எனக்கூறும் காச் சிறப்பும் நாம் அறிந்து பாராட்டற்குரியனவாம் :

- கடுங்கண் மறவர் கல்கெழு குறும்பின்

எழுந்த கண்ணுமை இடங்கட் பாணி . அருஞ்சு.ாம் செல்வோர் நெஞ்சம் துண்ணென.” ' வைகுசுடர் விளங்கும் வான்தோய் வியன்ாகர்.”

.’ (அகம் : அஎ) தலைவன் தேர் வாக்கண்ட தலைவி, விருந்தயர் விருப் பினளாயினள் என ( ஏற் : டசுக) அவர் கூறும் பாட்

படித்து மகிழ்தற்குரிய்த்ாம்.