பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரு தன் இளநாகனர் 31

அகனானுாற்றில் இருபத்துமூன்று செய்யுட்களையும், புற நானுாற்றில் ஐந்து பாடல்கரேயும் பாடியுள்ளார். கச்சேர் இயற்றியது எனப்படும் களவியல் உரைக்கண், 'உருத்திர சன்மனத் கால் வேண்டுமென்று வேண்டி, கொடுபோந்து, வெளியது உடீஇ, வெண் பூச் சூட்டி, வெண் சாந்தணிந்து, சன்மாப் பலகையேற்றிக் கீழிருந்து சூத்திரப் பொருள் உரைப்ப, எல்லாரும் முறையே உரைக்கக் கேட்டு வாளா இருந்து, மதுரை மருதன் இளநாகனர் உரைத்தவிடத்து ஒரோவிடத்தக் கண்ணிர் வார்ந்து மெய்ம்மயிர் கிறுத்து,” என்ற தொடர் காணப்படுவதால், இறையனர் களவியலுக்கு இவரும் ஒர் உரை யெழுதியுள்ளார் என்பது புலளும்.

இனி, மதுரை மருதன் இளகாகளுர் வேறு ; மருதன் இளசாகனுர் வேறு : மதுரை மருதன் இளநாகனுர், இறையனுர் களவியலுக்கு உரை வகுத்தவர்; புறத்தில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனைப் பாடியவர்; மருதன் இளநாகனர், மருதக்கலியைப் பாடியவர்; பாண்டியன் கூடகாத்துத் துஞ்சிய மாறன் வழுதி, காஞ்சில் வள்ளுவன் ஆகியோரைப் பாடியவர் என்று கொள்வர், புறநானூற்றுப் பதிப்பாசிரியர் டாக்டர். உ. வே. சாமிளுத ஐயரவர்கள்,

- அவர் அவ்வாறு கொள்வதற்குக் காரணமாயது, புறநானூற்றுப் பாக்களின் அடியில் காணப்பெறும் கொளுக்களில், மதுரை மருதன் இளநாகனர் எனவும், மருதன் இளசாகனர் எனவும் வேறுபடத் தோன்ற எழுதப் பட்டிருப்பதேயாம் ; ஐயரவர்களே, அக் கொளுக்களில், சில, மதுரைச் சீத்தலைச் சாத்தனர் எனவும், சில சித்தலைச் சாக்களுர் எனவும் கூறவும், அவ்விரு பெயர்களும் வேறு வேறு இயல்பினராய இருவரைக் குறிக்கும் எனக் கொள்ளாது, இவ்விருபெயர்களும், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தளுர் ஒருவரையே குறிக்கும் எனக் கொண்டுள்ளாாதலாலும், சில புலவர் பிறந்த ஊர்ப் பெயர்களே இணைத்து வழங்க, சில, அவற்றை இணைக்காது வழங்கவருவது, ஏடுகளில் காணப்படும் இயல்பு ஆதலாலும்,