பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பேயனர்

கொளுக்களில் அவவாறு உள்ளன என்பதை மட்டுமே கொண்டு மருதன் இளநாகனர் இருவராவர் எனக் கொள்ளுதல் பொருந்துவதன்றாம்.

இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன், மிக்க போாண்மையுடையவன் ; இவனேப் பாடிய புலவர் பலரும் இவன் ஆண்மையினேயே பாராட்டியுள்ளனர்; மக்கள் நலத்தை மாண்புறப் பெற்றவன்; இவ்வாறு படையாலும், புதல்வர்களாலும் பொலிந்து தோன்றினமையால், தன்னைப் பாடிவரும் பரிசிலர்க்கு விரைந்து பரிசளிக்கும் பண்பிலாதா வைன். அதனுல் இவனேப் பாடிய புலவர்களுள் ஆவூர் மூலங்கிழாரும், வடமவண்ணக்கன் பேரிசாத்தனரும் பெரிதும் வருந்திப் பாடியுள்ளனர். பேராண்மை மிக்க இவன் பெருங்குணனிலனுதல் அறிந்த புலவர் மதுரை மருதன் இளநாகனர், அவனுக்கு அறமுரைத்து அறிவுடை யனுக்க விரும்பினர். அவனே அடைந்து, சிவபிரானுக்குக் கண்கள் மூன்ருயினும் அவற்றுள் அமரராலும் வணங்கப் படும் சிறப்புடையது, அவர் பகைவரைப் பாழாக்கிய நெற்றிக்கண்ணே ; அதைப்போல், தமிழ்நாட்டு வேந்தர் மூவரேயாயினும், அவருட்சிறப்புடையோன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன் மாறனே எனப்புகழ்ந்தார்; வேலன்று வென்றி தருவது ; மன்னவன் கோல் ; அது உம் கோடா தெனின் ” என்பவாகலின், மறப்படையினும், அறப் படையே அரசர்க்கு வேண்டும் என்பதை எடுத்துக்கூற விரும்பினர்; வேந்தே கடுஞ்சினமும், பகைவர் படையைப் பாழாக்கும் பேராண்மையும் உடையது கின் யானேப்படை , விரைந்த செலவினையும், போர் வேட்கையினேயும் உடையது. கின் குதிரைப்படை, கின்று பறக்கும் கொடியும், கிமிர்ந்த நடையும் உடையது கின் தேர்ப்படை ; உள்ளத்தே உரனும், போர் என்றவுடனே பூரிக்கும் தோளும் உடையர் கின் வீரர்; இவ்வாறு மாட்சிமையுற்ற பெரும் படையினே உடையை நீ’ என அவன் படைப்பெரும்ையினைக் கூறிப், பின்னர், இவ்வாறு, பெரும் படையால் பாற்ெருய் எனினும், கின் ஆட்சியின் அழியலாகாத் திண்மை, அப்