பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதன் இளநாகனர் 37

இவ்வாறு பாண்டியர் இருவரைப் பாராட்டிய புலவர்

மதுரை மருதன் இளநாகனர், பகைவர் அரண்மிக்க மதிற் புறத்தே போக்தாாாகவும், அவரைத் தாக்கி, அவர் முரசு களையும் கைக்கொண்டதோடு அமையானுய், அவரை, அவர் நாடுவரை தரத்திச்சென்று, ஆங்கு அவரையும் அழித்து, அவர் அரண்களையும் கைக்கொண்ட செழியன் ஒருவனேயும்,

' கண்ணுர்

அாண்தலே மதிலராகவும், முரசுகொண்டு

ஒம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன்.” (கற் : உக)

பகைவர் புறங்கொடுத்து ஒடக்கண்ட பேராண்மையினேயும், முழந்தாள் அளவும் தாழ்ந்து தொங்கும் நீண்ட கைகளையும் உடையவன்; வெல்லும் போர்பல கண்டவன் ; பகைவரைப் பாழ்செய்து வென்ற புகழ் கிறைந்த வேலேந்தியவன் என ஒரு வழுதியையும், -

Éť ஒன்னர்

ஒடுபுறங் கண்ட, தாள்தோய் கடக்கை

வெல்போர் வழுதி, செல்சமத் துயர்த்த

அடுபுகழ் எஃகம்.” (அகம் : கூகஉ) வேம்பின் மலர்மாலே அணிந்தவன்; பொதியமலை உடை யவன்; அவன் பொருத போர்க்களத்தே பகைவர் படையும், அாணும் பாழாகும் என ஒரு பாண்டியனேயும் பாடிப் பாராட்டியுள்ளார்: -

" சினையலர் வேம்பின் பொருப்பன் பொருத

முனையாண் போல உடைந்தன்று. (மருத. கலி: உஎ) பாண்டியர்களைப் பாராட்டிய மதுரை மருதன் இள

நாகனர், தம் பாண்டிகாட்டுப் பற்று அவ்வளவோடு அமைதி உருமையான், அப்பாண்டியர்க்குப் படைத்துணே வழங்கும் வீரனும், ஒளவையார் போன்ற அருந்தமிழ்ப் புலவர்களால் பாராட்டப்பெறும் பெருங்கொடையாளியும் ஆய நாஞ்சில் வள்ளுவனைப் பாடியுள்ளார். போாசர் இரு வரை ஒவ்வொரு பாட்டால் பாராட்டிய புலவர், காஞ்சில்