பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதன் இளநாகனர் .45

மீட்பதும் அன்ருட கிகழ்ச்சிகளாகிவிட்டன ; இத்தகைய நிகழ்ச்சிகளில் உண்டாம் போரில், இரு திறத்தாரிலும் பலர் இறப்பர் ; அவ்வாறு இறந்தாருள் மீட்கச் சென்று இறந்தார் மாண்புடையராதலின் அவர்க்குக் கல் நாட்டிச் சிறப்புச் செய்தனர் அக்கால மக்கள். இந் நடுகற் சிறப் பினைப் புலவர் பலவாறு விளக்கிப் பாராட்டுகின்றார் ;. இறந்த வீரர்களே, மறவர்கள் விடியற்காலத்தே ஆக்களைக் கவர்ந்து சென்று விட்டாராகத் தம் தாய்மார்களை நினேந்து, அவை சென்ற அரிய சுரவழியில் ஒடி இளைத்து, மேலும் ஒடமாட்டாமல் வருந்திகின்று கண்ணிர் வாாக் கதறிக் கதறி அழும் கன்றுகளின் துயரைப் போக்குவான் வேண் டிச்சென்று அம் மறவரை மடக்கிப் போரிட்டு ஆனிரை களை மீட்டுத் தந்து, அம் மீட்சிப்போரில் தம் உயிர் கொடுத்த ஆண்மையாளர் என்று பாராட்டுகிரு.ர்.

'வீளை அம்பின் விழுத்தொடை மழவர்

நாள்ஆ வுய்த்த காமவெஞ் சுரத்து நடைமெலிந்து ஒழிந்த சேட்படர் கன்றின் கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்.” (அகம்: கங்க)

அவ்வாறு இறந்தார்க்கு நடுகல் நடுங்கால், அவர் பெயரும், அவர் பெருமையும் பொறிக்கப்பெற்ற கற்களே அவர் இறந்த அவ்விடங்களில் நடுவர் ; இவ்வாறு வேறே கல் கொணர்ந்து நடுவதே அன்றி, அவர் இறந்த இடங் களில் உள்ள பாறைகளில் அவர் பெயரையும், பெருமை யையும் பொறிப்பதும் உண்டு. அவ்வாறு எழுப்பிய நடுகற்கு, மஞ்சள் தெளித்து, மயிற்பீலிசூட்டி, மாலை அணி வித்து வழிபாடு செய்து வணங்கிய பின்னரே உடன் சென்ற வீரர் ஊர் கிரும்புவர்; அவ்வாறு எழுப்பிய அக் கற்கள் அவ்வழிச்செல்லும் வணிகர்தம் பொதிஏறிய வண்டியின் உருள்களால் பலகாலும் தாக்குறுவதால், அக்கற்களில் பொறிக்கப்பெற்ற எழுத்துக்கள் சிதைந்து படிக்க இயலாவாறும், வேறு பொருள்படுமாறும் சிதைந்து பாழாவதும் உண்டு. நடுகற்பற்றி இந் நிகழ்ச்சிகளையும் புலவர் விடாது குறித்துச் சென்றுளார் :