பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதன் இளநாகனர் 47

வியாழனையும் வெள்ளியையும் (மரு. கலி : உச), அறிந்து

கூறுவதோடு, மணம் செய்வார், அம் மனவினைக்காம் தன்னுள் வேண்ட, அஃதறிந்து அறிவிப்பார் அந்தணர்; அந்தணர் ஒத்து அறிந்தவர்; அவர் ஒம்பிய எரியினே மண மக்கள் சூழவந்து மனங்கொள்வர் என அந்தணரையும், அல் அந்தணர் துணைபெற்று கடந்த அக்காலத் திருமணங் களையும் (மரு. கலி : உஅ, ச) தமக்கு உரைத்துள்ளார்.

தம் காலத்தே கிலவிய சமயநிலைகளை விளக்கிய புலவர் மதுரை மருதன்இளநாகனர், தம் கால மக்கள் இயல்புகள் சிலவற்றையும் எடுத்துக் கூறியுள்ளார்; அரசன் அவைக்களத்தே வாழும் ஆன்ருேர் தாம் எழுதிப்போக்கும் ஒலைகளைப் பிறர் பிரித்துக் காணுவாறு கட்டி அக்கட்டின் மீது முத்திரை பொறித்த விடுதல் வழக்கமாம். பழங் காலத்தே, ஊராண்மைக் கழகங்கட்கு உறுப்பினரைத் தேருங்கால், அவ்வூரார் தாம் விரும்புவார் பெயரைத் தனித்தனி ஒலைகளில் எழுதி ஆன்ருேர் கூடியுள்ள அவை யிடை வைத்த குடத்திலுள் இடுவர் ; அக்குடத்தினே ஆங் குள்ளார் பலரும் காணத் திறந்து அவ்வோலைகளே எடுத்து ஆராய்வதற்குமுன், அக்குடத்தின்மீது இடப்பெற்ற அரச இலச்சினையைப் பழுதாகாதிருப்பதுகண்டு போக்கிக் குடத் தினேப் பிரிப்பர். இங்கிகழ்ச்சிகளைப் புலவர் இருவேறு இடங்களில் எடுத்துக் காட்டியுள்ளார் (அகம் : எள ; மரு. கலி : உக). -

வணிகர்கள், தம் பண்டப் பொதிகளே வண்டிகளி லேயே அன்றிக் கழுதைகள் மீதும் ஏற்றிக்கொண்டு செல்வர் என்றும், அவ்வாறு செல்லும் வணிகர்க்கு ஆறலை கள்வரால் உண்டாம் ஆக்கக்கேட்டினே அழித்துக் துணை புரிவான் வேண்டி வீர் பலர் அவ்வணிகர் குழுவோடு செல்வர் என்றும் கூறுகிருர் (அகம் : உசாட).

பழந்தமிழர், கடல் கடந்து சென்றும் வணிகம் புரிங் தவராவர்; அவர்கள் பெருங்கடலைக் கடந்த செல்வதற்கு வேண்டும் பெரிய பெரிய கப்பல்களைக் கொண்டிருந்தனர்; அத்தகைய கப்பல்கள் ஒர் ஊரே எனத் தோன்றுமாறு