பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 · பேயனர்

பட்டு ஒன்றி வாழ்ந்த மகளிரையும் பிரித்து துயர் உறன் தும் பழிக்குணமும் அவர் பால் உண்டு; அதை நீ கொள் ளற்க ’ என்று தன் மகன் கொள்ளலாம் குணம் இவை; தள்ளலாம் குற்றம் இவை என எடுத்தோ கிள்ை. இக் தாயின் நல்லறிவும், நற்பண்பும் தமிழகத்துத் தாய்மார்க் குத் துணைபுரியுமாக!

'செம்மால் வனப்பெலாம் நுந்தையை ஒப்பினும், நச்தை

சிலைப்பாலுள் ஒத்தகுறி என்வாய்க்கேட்டு ஒத்தி: கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும் வென்றி மாட்டொத்தி, பெரும மற்று ஒவ்வாதி ஒன்றினேம் யாம் என்று உணர்ச்தாரை துங்தைபோல் மென்தோள் நெகிழவிடல்; பால் கொளல் இன்றிப் பகல்போல் முறைக்கு ஒல்கா கோல் செம்மை ஒத்தி; பெரும! மற்று ஒவ்வாதி கால் பெரு பூவின் கவின் வாட, துங்தைபோல் சால் பாய்ந்தார் சாயவிடல்; வீதல் அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு ஈதல் மாட்டொத்தி; பெரும! மற்று ஒவ்வாதி மாதர் மென் நோக்கின் மகளிரை தந்தை போல் நோய்க. நோக்காய் விடல்.’ (மருதக் கலி: உக)

தலைவிபெறும் இன்பம் தான்் பெறும் இன்பமாம் எனவும், அவளுக்குற்ற துயர், தனக்குற்ற தியாகவும் எண்ணும் இயல்புடையாள் தோழி. கோழியும், கலேவியும் ஈருடலும் ஒருயிருமாய் வாழும் இயல்பினராவர் என்பதைப் புலவர், ஒருபாட்டில் எடுத்துக் காட்டியுள்ளார். கமர், தாம் விரும்பிய தலைமகனுக்குக் தலைவியை மணம் செய்து தாரார் என்பதறிந்தாள் தோழி; அங்கிலையில் தலைவியின் கற்பு கெடாமை வேண்டுமாயின், அவள் அத்தலைவளுேடு அவலூர் சென்று ஆண்டு அவனே மணந்து வாழ்வதேதக்கது எனத் துணித்தாள்; இதுகாறும் பிரிக் கறியா அவளைப் பிரிதல் தனக்குப் பெருந்தியர் தருவதாயின், அப்பிரிவில் அவள் கற்பு உளது என்ற உள்ளத்தால், ஒருவாறு உறுதி பெற்ருள் இருவரும் போகற்கு ஆவன புரிந்து கின்ருள்: