பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதன் இளநாகனர் 55,

அவர்கள் போகும் வழியின் கொடுமையினையும், அவ்வழி யில் கடந்து வருந்தும் தன் தோழியின் துயர் உறு நிலை யினையும் எண்ணிள்ை: ஆருத்துயர் உற்ருள்; அவ்வழி, அவள் போகுமாறு இனிமை உடையதாக மாருதா! வெயி லால் வாடிவற்றிய மரங்கள், தளிர் ஈன்று தழைக்கவும், வெப்பம் நீங்கவும், விசும்பெலாம் இருண்டு வேண்டும் அளவு பெய்ய மேகம் வரிசைவரிசையாக எழாதா! மழை பெய்த கிலத்தே பசும் புல் தோன்றிப் படாாதா! அப்பசும் புல் இடையிடையே செங்கிறக் கோபம் சிதறிக்கிடந்து கவினுறு காட்சியதாகாதா என்றெல்லாம் எங்கிளுள்; என்னே அவள் அன்பு என்னே அவள் உள்ளத் துாய்மை!

'செலவுதலேக் கொண்ட பெருவிதுப்புறுவி

போகுர்ே புலம்பும் ஆறே எகுதற்கு அரிய வாகும் என்னுமைக் கரிமாங் கண்ணகை இளங்குழை கான்முதற் கவினி, விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்கப் பசுங்கண் வானம் பாய்தளி பொழிந்தெனப் புல் நுகும்பு எடுத்த நன்னெடுங் கானத்து ஊட்டுபஞ்சிப் பிசிர் பரந்தன்ன வண்ண மூதாய் தண்ணிலம் வரிப்ப இயை வாகுக தணிந்தே இன்ன கீப்பின் நீன்ருெடு செலற்கே. (அகம்: உஅக.)

இறுதியாக, மதுரை மருதன் இளநாகனர்பால் மண் டிக்கிடந்த மாண்பு ஒன்றைக் கூறுவோமாக. மதுரை மருதன் இளநாகனர் புலவர் பலர் வாழ்ந்த மதுரையில் வாழ்ந்தவர் ; அப்புலவர்களின் பெருமையை உணர்ந்தவர் ; அப்புலவரோடு பழகிய பண்புடையவர். அதனல் அப் புலவர்தம் பெருமையறிந்த போற்றும் பெருங்குணமுடை யாாயினர் : பாங்குன்றைப் பாராட்ட எண்ணிய புலவர், அது அந்துவன் பாடியதால் பெருமையுற்றது என்று கூறிய ஒன்றே அவர்க்குப் புலவர் பால் உள்ள பெரு மதிப்பை உணர்த்தவல்லதாம் ; அவர் அவ்வளவோடு