பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமூலனர் 7蓝

தமிழகத்தின் வடக்கெல்லையாக விளங்கும் வேங்கட மலையையும், அதைச் சூழ உள்ள சிறு நாட்டையும் ஆண்டு வந்தான்் புல்லி எலும் வீரன் ஒருவன் ; புல்லி சிறந்த வீரர் பலர் சூழ வாழ்ந்தவன் ; மழவர் எனும் குதிரை வீரரை வென்றவன் ; வீரர் குழ வேட்டைமேற் சென்று களிறு பல கைப்பற்றிக் கொணர்வன் ; கள் விற்றுப் பெற்ற நெல்லால் ஆக்கிய சோற்றுணவை, சன் நாளோ லக்கம் காண வருவார்க்கு அளித்து மகிழ்வன் ; அவன் வேங்கடம் விழாக்கள் பல நடைபெறுவதால் பெற்ற பெரும் புகழுடையது ; அவ் வேங்கடம், தமிழகத்திற்கே அல்லாமல், அப் புல்லியின் நாட்டிற்கும் வடவெல்லையாம் ; வேங்கடத்தைக் கடந்தால் தமிழ்மொழி வழங்காது ; வேங்கடத்திற்கு வடக்கே வடுகர் நாடு உண்டு; புல்லி, பாய்யா காவுடையன் ; புல்லி, கள் வர்குலத் தலைவன் ; என்ப; இக் கள்வர் என்பார், சங்க காலத்தை அடுத்து நிலவிய தமிழகத்து அரசியல் இருள் கிலேக்குக் காரணமாய களப்பிரரே எனக் கொள்வாரும் உளர். இப் புல்லியையும், அவனுக்குரிய வேங்கட நாட்டுச் சிறப்பையும் புலவர் மாமூலனுர், பல பாக்களில் வைத்துப் பாராட்டியுள்ளார்:

'அண்ணல் யானை வெண்கோடு கொண்டு

நறவு கொடை கெல்லின் காண்மகிழ் அயரும் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம்.”

"புல்லி குன்றத்து

நடையருங் கானம் விலங்கி நோன்சிலேத் தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர் பிழியார் மகிழர் கலிசிறந்து ஆர்க்கும் மொழி பெயர் தேஎம்.”

புல்லி என்னுட்டு உம்பர்ச் செல்லரும் சுரம்”

'பொய்யா நல்லிசை மாவண் புல்லி’