பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. மாலே மாறன்

மாறன் எனும் பெயருடைமையான், புலவர் பாண்டி யர் குடியோடு தொடர்புடையராவர் என்பது பெறப்படும்; இவர் பெயர்க்கு முன் வரும் மாலை எனும் சிறப்பு வருதற். காம் காானம் இஃது எனப் புலப்படவில்லை; இவர் வேந்தர் குடிவழி வந்தவர் என்பதற்கேற்ப, வாளாம். போலும் விளிம்புகளையுடைய தாழைகள் வரிசையாக நிற்பது, வேலியாக நடப்படும் வேல்களைப்போல் தோன்று கிறது என, அரசர் அறியும் பொருளே உவமை காட்டி

புள்ளார்.

தலைவன், விரைந்து வரைந்து கொள்ளாமையால் வருந்தினுள் ஒரு தலைவி அவ்வருத்த மிகுதியால், அவள் உடல் நலமும் ஒரளவு குன்றிவிட்டது ; ஆயினும், அவள், தன் நலன் குன்றுவது குறித்தம் கவலைகொண்டா ளல்லள் ; தன் நலக்குறைவால் தன் வருத்தம் வெளிப்பட, அதனுல் அத்தலைவன் செய்யும் கொடுமை புறத்தார்க்குப் புலனுகும்மே! தகைசான்ற சொற் காக்கக் கடமைப்பட் டவளாய தன்னுலேயே, அவன் பழிச்சொற்கு உள்ளா வனே! எனத் தலைவன் பெறும் பழிகண்டே கவலை கொள்வாளாயினள் ; அதனல், தன் வருத்தம் புறத்தார்க் குப் புலனுகாவண்ணம் மறைத்து ஒழுகவும் முயன்ருள் ; இத்தகைய உயர்வுடையாளொரு பெண்ணின் பெருங் தகைமை விளக்கவந்த புலவர் பாட்டொன்று குறுக் தொகைக்கண் இடம் பெற்றுளது :

' கடலங்கானல் ஆயம் ஆய்ந்த என்

கலம் இழந்ததனினும் சனி இன்னுதே ; வாள்போல் வாய கொழுமடல் தாழை மாலை வேல் நாட்டு வேலி யாகும் மெல்லப் புலம்பன் கொடுமை பல்லோர் அறியப் பாக்து வெளிப் படினே.” - (குறும் : உசடு)