பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. மீளிப் பெரும்பதுமனுர்

பெரும்பதுமனர் என்பது இவரது இயற்பெயர் ; மீளி என்பது இவர் பிறந்து வாழ்ந்த பெருமைசால் பேரூர் ; அது யாண்டுளது என்பது இப்போது விளங்கவில்லை ; "பூரீ வில்லிபுத்தார் காலுக்காவில், மல்லி என்ருேர் ஊர் உள்து; மீளி என்பதே, மல்லி என்று கிரிந்து வழங்கு கிறதோ தெரியவில்லை ” என்று கூறுவர், ஈற்றிணை உரை யாசிரியர், திருவாளர் பின்னத்துார் நாராயணசாமி ஐயர் . பெரும்பதுமஞர் என்ற பெயருடைய புலவர் மற்றொரு வரும் உளர் ; இருவரும் ஒருவரே எனக் கொள்வர் சிலர் ; இவரை மீளிப் பெரும்பதுமனர் எனச் சிறப்பித்தும், அவரைப் பெரும்பதுமனர் எனப் பொதுவாகவும் அழைத் தலின், இருவரும் ஒருவரல்லர் என்பது துணியப்படும் ; இவர் பாடிய பாட்டாக, இப்போது கிடைத்திருப்பது, கற்றிணைக்கண் காணப்படும் பாட்டு ஒன்றே.

வாடை வீசும் மாலைக்காலத்தே தலைவனைப் பிரிந்து, தனித்துத் துயருறும் தலைவியின் நிலைக்குச், சேறு கிறைந்த தொழுவத்தினின்றும் வெளிக்கொணர்ந்து வேறிடத்தில் கட்ட வேண்டிய இருள் செறிந்த இராக் காலத்தே, அவ்வாறு கொண்டு சென்று கட்டாமையோடு, அத்தொழுவத்தினுள்ளும், கீழே படுக்கவும் இயலாமல், கின்ற கிலேயிலேயே கிற்குமாறு, கலைக் கயிற்றை இழுத்து உச்சியிலே தாக்கி இறுகப் பிணித்து விடப்பெற்ற பச்வின் துயர் நிலையினை உவமை கூறிய திறம், புலவர் தம் புலமைக் குப் பெருமையளித்து கிற்கிறது.

“ விாைக்கும் வாடை இருள்கூர் பொழுதில்

தொளியுடைத் தொழுவில் துணிதல் அற்றத்து உச்சிக் கட்டிய கூழை ஆவின் கிலேயென ஒருவேனகி உலமாக் கழியும் இப்பகல் மடி பொழுதே.”

(நற் : கoக)

"mama"